Nayanthara vs Dhanush: அட்வான்ஸ் புக்கிங்கிலேயே ‘கர’ படத்தை காலி செய்த ‘பேட்ரியாட்’.. இத்தனை கோடியா?
சென்னை: மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால், பகத் ஃபாசில் உடன் நயன்தாரா, ரேவதி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள பேட்ரியாட் (Patriot) திரைப்படம் மே 1ம் தேதியான இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. லால் ஏட்டனும் மம்முக்காவும் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை பார்க்க மலையாள ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.
இதுவரை படத்துக்கான அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங்கிலேயே மிகப்பெரிய வசூல் சாதனையை இந்த படம் நிகழ்த்தியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

தமிழில் நேற்று வெளியான தனுஷின் 'கர' படம் முதல் நாளில் டபுள் டிஜிட் வசூலை கூட உலகளவில் ஈட்டவில்லை என்பது தமிழ் சினிமாவுக்கும் தனுஷ் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர உலக வசூல்: தமிழ்நாட்டில் சுமார் 6 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியுள்ளது 'கர' திரைப்படம். முதல் நாளிலேயே டிசாஸ்டர் டேக் ஓட்ட ஆரம்பித்து விட்டனர். கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் தனுஷ் போன்ற நடிகரின் படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் வெறும் 6 கொடி வசூலையும் உலகளவில் ஒட்டுமொத்தமாக 9 கோடி வசூலும் ஈட்டுவதெல்லாம் ரொம்பவே குறைவு என்கின்றனர். நேற்று காலை காட்சிகள் நிரம்பாத நிலையில், மாலை காட்சிகள் நிரம்பிய நிலையில், மே 1 முதல் 3 வரை தொடர் விடுமுறை என்பதால் தனுஷ் படத்துக்கு வசூல் அதிகரிக்குமா? அல்லது கலவையான விமர்சனங்கள் காரணமாக படத்தின் வசூல் குறையுமா? என்பது திங்கட்கிழமை தெரிந்து விடும்.
பேட்ரியாட் அட்வான்ஸ் புக்கிங் வசூல்: தனுஷின் 'கர' படத்துக்கு எல்லாம் அதிகபட்சமாக 3 கோடி தான் அட்வான்ஸ் புக்கிங் கிடைத்தது. மோகன்லால், மம்மூட்டி, நயன்தாரா நடித்துள்ள படம் என்பதால் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் வசூல் இதுவரை 20 கோடி ரூபாயை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகம் முழுவதும் முதல் நாளிலேயே அதிகபட்சமாக 30 முதல் 40 கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாஸ் காட்டும் மலையாள சினிமா: தமிழ் சினிமாவில் கடைசியாக அதிக வசூலை ஈட்டிய படம் என்றால் அது கூலி தான். ஆனால், அதன் பட்ஜெட் வசூலை விட அதிகம் என்கின்றனர். கேரளாவில் லோகா சாப்டர் 1, எம்புரான், வாழ 2 படங்கள் தொடர்ந்து 200 கோடி, 300 கோடி என வசூலை அள்ளி வருகின்றன. மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மோகன்லால், மம்மூட்டி, பகத் பாசில், நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட் திரைப்படம் மலையாள திரையுலகின் அதிக வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications