ரிலீசுக்கு தயாராகும் மோகன்லால் படம்... இதுவும் வெற்றிதான் என சொல்லும் ரசிகர்கள்.

கொச்சின்: மோகன்லால் கதாநாயகனாக நடித்து ஜீத்து ஜோசப் இயக்கிய மலையாள படம் திரிஷ்யம். திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்ட திரிஷ்யம் படம் மோகன்லால் திரைவாழ்க்கையில் ஒரு மைல்கல். வசூல் ரீதியாக அவர் முந்தைய படங்கள் அனைத்தையும் அது மிஞ்சியது.

தன் குடும்பத்தைக் காப்பாற்ற எதையும் செய்யத் துணியும் ஜார்ஜ் குட்டியாக அவர் வாழ்ந்திருப்பார். மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார். அதைத் தொடர்ந்து அவர்கள் கூட்டணியில் வெளியான படம் திருஷ்யம் 2 இந்த படமும் பெருவாரியான மக்களால் வரவேற்பு பெற்று வெற்றியும் அடைந்தது.

மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப் மேலும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர். அந்த படத்திற்கான முக்கியமான ஒரு பதிவை அந்த படத்தின் இயக்குனரான ஜீத்து ஜோசப் வெளியிட்டு மோகன்லால் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

வெற்றிக்கூட்டணி

வெற்றிக்கூட்டணி

மோகன்லால் மற்றும் ஜீது ஜோசப் ஒரு வெற்றி கூட்டணி என அழைக்கப்படுகிறது. இவ்விருவரது கூட்டணியில் வந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். திரிஷ்யம் படம் ஒரு மைல்கல். அதன் வெற்றி இந்தியா முழுக்க பேசப்பட்டது. திரிஷ்யம் படம் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அந்தந்த மொழிகளில் சூப்பர்ஹிட்டானது. தமிழில் கமல்ஹாசன் நடிக்க பாபநாசம் ஆக வெளியான அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த சமயத்தில் த்ரிஷ்யம் படத்தில் நடித்த மோகன் லாலா அல்லது பாபநாசம் படத்தில் நடித்த கமல்ஹாசன் யார் நடிப்பு சிறப்பு எனும் விவாதங்கள் வலைத்தளங்களில் பெரிய அளவில் காணப்பட்டது.

வெற்றிக்காக காத்திருக்கும் மோகன்லால்

வெற்றிக்காக காத்திருக்கும் மோகன்லால்

மோகன்லால் கடைசியாக ஹிட்டடித்த படம் 2021 ஆம் ஆண்டு ரிலீஸான திரிஷ்யம் 2. அதை இயக்கியவர் ஜீத்து ஜோசப். நேரடியாக OTT யில் ரிலீஸ் ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு பிரியதர்ஷன் இயக்கிய படமான மரக்கர் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்போடு திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. படம் தோல்வி அடைந்தது. அதன்பின்னர் ரிலீசான " ப்ரோ டாடி " யும் எதிர்பார்ப்பை நிறைவேற்றாமல் ஏமாற்றம் அடைய செய்தது.

மீண்டும் இணையும்

மீண்டும் இணையும்

த்ரிஷ்யம் 2 படத்திற்கு பிறகு மோகன்லால் மற்றும் இயக்குனர் ஜீத்து ஜோசப் இணையும் புதிய படம் 12th Man. மிஸ்டரி த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதியவர் கே ஆர் குமார். சம்மந்தமில்லாத 12 அன்னிய நபர்கள் ஒரு இடத்தில் ஒரு சேர்ந்து ஒரு பார்ட்டியில் கலந்து கொள்ள அங்கே என்ன நடக்கிறது எனும் கதையை அடிப்படையாக எடுக்கப்பட்டுள்ள தாக சொல்லப்படுகிறது. மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப் கூட்டணி என்பதால் படம் சூப்பர்ஹிட் என சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

12th Man Finished

12th Man Finished

12th Man படம் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டில் துவங்கிய படப்பிடிப்பு 48 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளனர். ஜீத்து ஜோசப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு 12th Man படத்தின் post-production முடிந்துவிட்டது ரிலீசுக்கு தயார் என பதிவிட்டுள்ளார். இதனால் மோகன்லால் ரசிகர்கள் உற்சாகத்தில் இதை ஷேர் செய்து வருகின்றனர். இந்த படம் நேரடி OTT படம் எனவும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X