Mohanlal Net worth: 20 கோடி மதிப்பில் சொகுசு கார்கள்.. கப்பல் போல பங்களா.. மோகன்லால் சொத்து மதிப்பு!

திருவனந்தபுரம்: மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கேரளாவில் சுமார் 44 ஆண்டுகள் கிங்காக தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கி நடத்திக் கொண்டிருக்கிறார் மோகன்லால்.

மம்மூட்டி மற்றும் மோகன்லால் இருவருமே 40 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாள திரையுலகை ஆட்சி செய்து வருகின்றனர். சிறந்த நடிகர்களாகவும் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்களாகவும் உள்ளனர்.

Mohanlal Net Worth and Luxurious Life details are here

மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் எம்புரான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இந்நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்களை இங்கே காணலாம்.

தமிழில் மோகன்லால்: மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் கோலிவுட்டிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தில் நடித்து கலக்கி இருப்பார். கமல்ஹாசன் உடன் உன்னைப்போல் ஒருவன், விஜய்யுடன் ஜில்லா, சூர்யாவுடன் காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்த மோகன்லால் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்து மாஸ் காட்டினார்.

Mohanlal Net Worth and Luxurious Life details are here

சம்பளம்: தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், அஜித் எல்லாம் 100 கோடி சம்பளத்தை கடந்த விட்ட நிலையிலும் மலையாள நடிகர்கள் இன்னமும் சம்பளத்தை பெரிதாக உயர்த்தவில்லை. அதிகபட்சமாக மோகன்லால் புதிய படங்களுக்கு 20 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என்றும் 100 கோடி பட்ஜெட்டில் தான் பெரிய படங்களே அங்கே உருவாகி வருவதாகவும் கூறுகின்றனர்.

சொதப்பிய மலைக்கோட்டை வாலிபன்: இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமலு, பிரமயுகம், மஞ்சுமெல் பாய்ஸ், ஆடு ஜீவிதம், ஆவேசம் உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. ஆனால், ஜனவரி 26ம் தேதி மோகன்லால் நடித்து வெளியான பீரியட் படமான மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. எம்புரான் மற்றும் பரோஸ் படங்கள் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார்.

Mohanlal Net Worth and Luxurious Life details are here

சொகுசு பங்களா: 1988ம் ஆண்டு சுசித்ரா என்பவரை திருமணம் செய்துக் கொண்ட மோகன்லாலுக்கு பிரனவ் மற்றும் விஸ்மயா என 2 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் தனது மகன் பிரனவை ஹீரோவாக ஆக்கி உள்ளார் மோகன்லால். அவர் நடித்த ஹ்ரிதயம் படம் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், பல படங்களில் நடித்து வருகிறார் பிரனவ். கொச்சியில் சொகுசு வீடு ஒன்று மோகன்லாலுக்கு சொந்தமாக உள்ளது. மேலும், திருவனந்தபுரத்திலும் ஒரு பெரிய வீடு உள்ளது. இதை தவிர சுமார் 50 ஏக்கர் நிலமும் கொச்சியில் மோகன்லாலுக்கு உள்ளது.

காஸ்ட்லி கார்கள்: சுமார் 20 கோடி மதிப்புள்ள கார்கள் மோகன்லாலிடம் உள்ளதாக கூறுகின்றனர். அதில், W221 Mercedes Benz S-Class, Mercedes Benz GL350 CDI, Toyota Innova, Toyota Vellfire and Ojes Coach Caravan என பல வாகனங்கள் உள்ளன.

சொத்து மதிப்பு: கிட்டத்தட்ட 44 ஆண்டுகள் சினிமாவில் நடித்து வரும் நடிகர் மோகன்லால் கேரளாவில் அதிகளவில் சொத்து சேர்த்து வைத்துள்ள நடிகராக திகழ்கிறார் எனக் கூறுகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி, விளம்பரம் என ஆண்டுக்கு 30 முதல் 40 கோடி வரை சம்பாதிக்கும் மோகன்லாலிடம் ஒட்டுமொத்தமாக 376 கோடி சொத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X