Don't Miss!
- News நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
எடை குறைத்து ஸ்லிம்மான மோகன்லால்... வைரலாகும் 'ஒடியன்' லுக்!
Recommended Video
திருவனந்தபுரம் : மோகன்லால் நடித்துவரும் 'ஒடியன்' திரைப்படத்தை விளம்பரப் படங்கள் இயக்குநர் ஶ்ரீகுமார் மேனன் இயக்குகிறார். இந்தப் படத்தை மோகன்லால் சொந்தமாகத் தயாரிக்கிறார்.
மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மோகன்லால் இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார்.
'ஒடியன்' படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், மோகன்லால் இளமையான தோற்றத்தில் நடிக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
|
பிளாக் மேஜிசியன்
கடந்த மூன்று வருடங்களுக்கு முன் வெளியான 'கூதரா' படத்திற்குப்பின் மிகவும் வித்தியாசமான தோற்றங்களில் மோகன்லால் நடித்து வரும் படம் தான் 'ஒடியன்'. இதில் இளமை மற்றும் வயதான தோற்றங்களில் ஒடியன் மாணிக்கன் என்கிற பிளாக் மேஜிசியனாக நடித்து வருகிறார் மோகன்லால்.
|
ஒடியன் டீசர்
மிகப்பெரிய ஆக்ஷன் படமாக உருவாக்கி வரும் இந்தப்படத்தை விளம்பரப்பட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன் என்பவர் இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
|
இளமையாக மோகன்லால்
நேற்று முன்தினம் இந்தப் படத்தின் டீசர் வெளியான நிலையில், இந்தப்படத்தில் இடம்பெறும் மோகன்லாலின் இளம் வயது தோற்றம் வெளியாகியுள்ளது. இந்தப்படத்திற்காக சுமார் 18 கிலோ வரை எடை குறைத்து ஸ்லிம் ஆகியுள்ளார் மோகன்லால்.
சண்டைக் காட்சிகள் சிறப்பு
'ஒடியன்' படத்தில் புலி முருகன் படத்தை விட ஆக்ஷன் காட்சிகளில் அதகளப்படுத்துகிறார்களாம். இப்படத்திற்காக 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன். இந்தப் படத்தின் ஷூட்டிங் காசி, பனாராஸ் ஆகிய பகுதியில் நடைபெற்றுள்ளது.