'ஜில்லா'வுக்காக மோகன்லாலுக்கு சம்பளம் தரவில்லையாமே!
சென்னை: ஜில்லா படத்தில் நடித்ததற்காக மோகன்லாலுக்கு சம்பளமாக ரொக்கம் கொடுக்கவில்லையாம்.
நேசன் இயக்கியுள்ள ஜில்லா படத்தில் விஜய், நிவேதா தாமஸுக்கு அப்பாவாக நடித்துள்ளார் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால். படத்தில் அவர் பெரிய தாதாவாக வருகிறாராம்.
ஜில்லா படப்பிடிப்பு முடிந்து பிற வேலைகள் நடந்து வருகின்றன.

லாலின் சம்பளம்
ஜில்லா படத்தில் நடித்ததற்காக மோகன்லாலுக்கு இவ்வளவு என்று ஒரு தொகையை சம்பளமாக கொடுக்கவில்லையாம். அப்படி என்றால் சம்பளம் வாங்காமலா நடித்தார் என்று நினைக்க வேண்டாம்.

கேரள உரிமை
ஜில்லாவின் கேரளா உரிமையை மோகன்லால் வாங்கிவிட்டார் என்று நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டோம். அந்த உரிமையை அவர் சம்பளத்திற்கு பதிலாக வாங்கிக் கொண்டாராம். அதுவே ரூ.3.5 முதல் 4 கோடி தேறுமாம். இது மோகன்லாலுக்கு தமிழில் கொடுக்கப்பட்ட அதிகபட்ச சம்பளமாம்.

கேரளாவில்
கேரளாவில் இளையதளபதி விஜய்க்கு ரசிகர்கள் ஏராளம். அதை மனதில் வைத்து தான் லால் ஏட்டன் ஜில்லாவின் கேரள உரிமையை வாங்கியுள்ளார் போன்று.

லாலும், விஜய்யும்
ஜில்லா படப்பிடிப்பின்போது மோகன்லாலுக்கும் விஜய்க்கும் இடையே நல்ல நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் இன்னொரு மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டியின் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதம் தெரிவித்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











