தலையில் முண்டாசு... வேட்டியை மடித்துக்கட்டி களமிறங்கும் மோகன்லால்… குவியும் பாராட்டு!
கேரளா : மலையாளத் திரையுலக சூப்பர் ஸ்டார் மோகன்லால் வீட்டில் இயற்கை வேளாண்மை தோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ அனைவராலும் பார்க்கப்பட்டு வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும் அவரன் இந்த செயலுக்கு அவரது ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்
கடந்த வருடம் போடப்பட்ட லாக் டவுன் காரணமாக, ஒட்டு மொத்த தென்னிந்திய திரையுலகமும் முடங்கியது. படப்பிடிப்புகளில் பிசியாக இயங்கி கொண்டிருந்த பிரபலங்கள் பலரும் தங்களுடைய குடும்பத்தினருடன் சமைப்பது, உடற்பயிற்சி செய்வது, தோட்டம் வளர்ப்பது என தங்களது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவழித்து வந்தனர்.
தற்போது மோகன்லால் அவருடைய வீட்டில் மிகப்பெரிய இயற்கை வேளாண் தோட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளார். அதில் , சுரைக்காய், தக்காளி, கத்திரிக்காய்,பச்சை மிளகாய், பாவக்காய் போன்றவற்றை வளர்த்து வருகிறார். அந்த தோட்டத்தை நேரம் கிடைக்கும் போது எல்லாம் தானே சென்று பராமரித்தும் வருகிறார்.
கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகளை போட்டுள்ளன. இத்தனை நாள் படப்பிடிப்புல் பிஸியாக இருந்த மோகன்லால் தற்போது போடப்பட்டுள்ள ஊரடங்களால் வீட்டுத் தோட்டச் செடிகளை கவனிக்கத் தொடங்கி விட்டார்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தோட்டத்திற்குள் ஒரு விவசாயி போல தலையில் முண்டாசுக்கட்டிக்கொண்டு, வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு செல்கிறார். இந்த வீடியோ அவரது ரசிகர்களால் வேகமாக பகிரப்பட்டது மட்டுமில்லாமல், பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











