twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்!

    |

    கொச்சி : பிரபல மலையாள நடிகர் மோகன்லால் இப்பொழுது பூனையுடன் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

    திரிஷ்யம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு திரிஷ்யம் பாகம் இரண்டில் நடித்து வருகிறார் மோகன்லால்.

    சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்! சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

    இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கிவரும் மரக்கார் திரைப்படத்தில் நடித்து வரும் மோகன்லால் இப்பொழுது பூனையுடன் போஸ் கொடுத்துக்கொண்டு உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் இன்டர்நெட்டில் வைரல் ஆகி வருகிறது.

    தமிழிலும் ரசிகர் கூட்டம்

    தமிழிலும் ரசிகர் கூட்டம்

    மலையாளத் திரைப்படத் துறையின் சூப்பர் ஸ்டாராக விளங்கிவரும் நடிகர் மோகன்லால் தமிழிலும் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து இங்கும் பிரபலமாக உள்ளார். சிறைச்சாலை, இருவர் என அப்போதே தமிழ் திரைப்படங்களிலும் தனது பங்களிப்பை அளித்து வரும் இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் தமிழிலும் இருந்து வருகிறது.

    ரீமேக் செய்யப்பட்டது

    ரீமேக் செய்யப்பட்டது

    நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தனது மிரட்டல் நடிப்பின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து திருப்தி படுத்தி வரும் மோகன்லால் 2013ம் ஆண்டு வெளியான த்ரிஷ்யம் திரைப்படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வர த்ரிஷ்யம் திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

    நேரடியாக அமேசான் தளத்தில்

    நேரடியாக அமேசான் தளத்தில்

    த்ரிஷ்யம் திரைப்படத்தின் மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து இப்பொழுது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வர படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசாக உள்ளது. இதுவரை திரையில் வெளியாகி பின் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வந்த மோகன்லால் திரைப்படங்களின் வரிசையில் த்ரிஷ்யம் பாகம் 2 முதன்முறையாக நேரடியாக அமேசான் தளத்தில் வெளியாகிறது.

    அதிக பொருட்செலவில்

    அதிக பொருட்செலவில்

    சரித்திர பின்னணியில் மலையாளத்தில் எக்கச்சக்கமான திரைப்படங்கள் உருவாகியிருக்க இப்பொழுது மீண்டும் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மரக்கார் என்ற பிரம்மாண்ட சரித்திர திரைப்படம் உருவாக இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பொருட்செலவில் இந்த படம் தயாரிக்கப்பட்டு வருகிறது இதில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

    கம்பீரமாக முறுக்கு மீசையுடன்

    கம்பீரமாக முறுக்கு மீசையுடன்

    மாஸ்டர் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாக விஜய் சேதுபதி மற்றும் விஜய் என இருவரும் கையில் பூனையுடன் போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இப்பொழுது அதேபோல மோகன்லாலும் கையில் ஒரு க்யூட்டான பூனைக்குட்டியை வைத்துக் கொண்டு, அதன் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சிக்கொண்டு. கம்பீரமாக முறுக்கு மீசையுடன் உட்கார்ந்திருக்கும் இந்த லேட்டஸ்ட் புகைப்படம் இப்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    English summary
    Mohanlal poses with a cat viral pics
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X