மஞ்சுமெல் பாய்ஸ் கலெக்‌ஷன் எல்லாம் தவிடுபொடி ஆகப்போகுது.. எம்புரான் முதல் நாள் வசூல் விவரம்!

கொச்சி: பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எம்புரான். அதாவது லுசிபர் 2. ஏற்கனவே அவரது இயக்கத்தில் வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் தான் எம்புரான். இதில் லுசிபர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டும் இல்லாமல் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப் படமாக மாறியது. இப்படி இருக்கும்போது, எம்புரான் படத்தின் முதல் நாள் வசூல் இப்போதே ரூபாய் 50 கோடிகளைக் கடந்து விட்டதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

எம்புரான் படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படம் நாளை அதாவது மார்ச் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படி இருக்கும்போது, படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் டிக்கெட்டுக்கான முன்பதிவு தொடங்கிய போது, ரசிகர்கள் படத்தின் டிக்கெட்டுக்காக தியேட்டரில் இருக்கும் பாக்ஸ் ஆபிஸில் வரிசையில் நின்று போட்டி போட்டுக் கொண்டு வாங்கினார்கள். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவியது.

எம்புரான் படத்தின் டிரைலர் மலையாளத்தில் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அதேபோல், தமிழிலும் இந்த டிரைலரை சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். படத்திற்கு மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நல்ல எதிர்பார்ப்பும் வரவேற்பும் உள்ளது. குறிப்பாக பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் இந்த படத்தின் ரிலீஸை முன்னிட்டு, ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.

Mohanlal PRITHVIRAJ Sukumaran Empuraan Movie First Day Collection More Than 50 Crores Bassed On Pre Booking

மலையாள சினிமா: மலையாள சினிமாவைப் பொறுத்தமட்டில், மற்ற சினிமா உலகங்களை விட, வணிக ரீதியாக பெரும் வெற்றிகளை நோக்கி நகரம் திரை உலகம் இல்லை. அதனால்தான் என்னவோ, இந்திய சினிமா உலகங்களில், மலையாள சினிமா உலகத்தில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் விமர்சன ரீதியாக பெரும் பாராட்டுகள் பெற்ற படங்களாக உள்ளது.

Take a Poll

மஞ்சுமெல் பாய்ஸ்: அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படம் கேரளாவில் ஓடியதை விட, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பைப் பெற்றது. காரணம் படத்தில் இடம்பெற்றிருந்த, இளையராஜாவின் பாடல் என்றாலும், உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் என்பதும் ஒரு காரணம். இந்த படம்தான், மலையாள சினிமாவில் ரூபாய் 200 கோடிகளை வசூல் செய்த முதல் படமும் மஞ்சுமெல் பாய்ஸ் படம் தான்.

Mohanlal PRITHVIRAJ Sukumaran Empuraan Movie First Day Collection More Than 50 Crores Bassed On Pre Booking

வசூல் சாதனை: இப்படியான நிலையில் லுசிபர் 2 எம்புரான் படத்தின் முதல் நாள் வசூல் ரூபாய் 50 கோடிகளை கடந்து விட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதாவது படத்தின் முன்பதிவு அடிப்படையில் இந்த வசூல் தொகையை படக்குழு தெரிவித்துள்ளது. மலையாள சினிமாவில் ஒரு படத்தின் முதல் நாள் வசூலில் ரூபாய் 50 கோடிகளை வசூல் செய்துள்ள படம் என்ற சாதனைப் படைத்துள்ள படம் என்றால் அது எம்புரான் படம்தான். இந்த படம் நாளை வெளியாக உள்ளது, நாளைய நாள் முடியும்போது முதல் நாளின் மொத்த வசூல் என்பது தற்போது படக்குழு தெரிவித்துள்ளதை விட கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Mohanlal PRITHVIRAJ Sukumaran Empuraan Movie First Day Collection More Than 50 Crores Bassed On Pre Booking

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X