மோகன்லால் - பிரியதர்ஷன் இணையும் அடுத்த படம் - ஐந்து மொழிகளில் தயாராகிறது
கொச்சின் : மோகன்லால் - பிரியதர்ஷன் நட்புக் கூட்டணி கடந்த 3௦ வருடங்களுக்கும் மேலாகத் தொடர்கிறது. கடைசியாக இவர்களது கூட்டணியில் 'ஒப்பம்' படம் கடந்த வருடம் வெளியானது.
'ஒப்பம்' படத்தில் கண்பார்வை தெரியாதவராக மோகன்லால் நடித்திருந்தார். அவர் பார்வையற்ற குறையை படம் பார்க்கும் ரசிகனும் உணராத வகையில் பக்கா கமர்ஷியல் ஆக்ஷன் த்ரில்லராக இந்தப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் பிரியதர்ஷன்.

இந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் பிரியதர்ஷன் தமிழில் உதயநிதியை வைத்து, 'நிமிர்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இது மலையாளத்தில் வெற்றிபெற்ற 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் ரீமேக் ஆகும்.
'நிமிர்' படத்தை முடித்ததும் அடுத்ததாக மோகன்லால் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் பிரியதர்ஷன். இந்தப்படம் ஐந்து மொழிகளில் தயாராக இருக்கிறதாம்.
தற்போது 'நிமிர்' படத்தைத் தயாரித்து வரும் சந்தோஷ் குருவிலா தான் இந்தப்படத்தைத் தயாரிக்க இருக்கிறார். சந்தோஷ் குருவிலா தனது பேஸ்புக் பக்கத்தில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











