நமக்காகவும்.. நாட்டுக்காகவும்.. இது அவசியம்.. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மோகன் லால்!

கொச்சி: மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன் லால் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளது.

நாடு முழுவதும் ஏகப்பட்ட பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டு வருகின்றனர். பிரபலங்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்வதால் மக்களும் அதை போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

முதற் கட்டமாக 60 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்னுரிமை வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக தற்போது நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளது. ஏகப்பட்ட பிரபலங்களும் கொரோனா தடுப்பூசியை போட்டு வருகின்றனர்.

தடுப்பூசி போட்ட கமல்

தடுப்பூசி போட்ட கமல்

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசியை நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் போட்டுக் கொண்டார். அதன் பின்னர் ஏகப்பட்ட பிரபலங்களும் கொரோனா தடுப்பூசியை போட்டு வருகின்றனர். நடிகை ராதிகா சரத்குமார், குஷ்பு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.

மோகன் லாலுக்கு தடுப்பூசி

மோகன் லாலுக்கு தடுப்பூசி

இந்நிலையில் கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் நேற்று கொரோனா தடுப்பூசியை மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன் லால் போட்டுக் கொண்டார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. மோகன் லால் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டு சொன்ன விஷயமும் வைரலாகி வருகிறது.

சமூக நலத்திற்காக

சமூக நலத்திற்காக

கொரோனா தடுப்பூசி தனி மனிதனுக்கு மட்டும் பாதுகாப்பு இல்லை. சமூகத்திற்கே இது பாதுகாப்பாக அமையும். உயிர்க் கொல்லி நோயான கொரோனா வைரஸுக்கு இத்தனை விரைவாக தடுப்பு மருந்தை கண்டுபிடித்து நமக்கு அளித்துள்ள மருத்துவர்களுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.

மே மாதம் ரிலீஸ்

மே மாதம் ரிலீஸ்

மோகன் லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரிஷ்யம் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்ததாக வரும் மே 13ம் தேதி மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் படம் வெளியாகும் என்கிற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. ஆராட்டு படத்தின் படப்பிடிப்பை அண்மையில் முடித்துள்ள மோகன் லால், அடுத்ததாக தனது இயக்கத்தில் உருவாகவுள்ள பரோஸ் படத்தின் படப்பிடிப்பையும் தொடங்கி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X