கொரோனா..சம்பளத்தை பாதியாக குறைத்த டாப் ஹீரோ.. அதிகமாக்கிய இளம் நடிகர்கள்.. தயாரிப்பாளர் அதிர்ச்சி!

By

கொச்சி: கொரோனா பிரபல டாப் ஹீரோ தனது சம்பளத்தை பாதியாக குறைத்திருக்கும் நிலையில் இளம் ஹீரோக்கள் அதிகமாக சம்பளம் கேட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனா காரணமாக சினிமா துறை மொத்தமாக கடந்த சில மாதங்களாக முடங்கி கிடக்கிறது.

தயாரான சினிமா படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

நடிகர், நடிகைகள்

நடிகர், நடிகைகள்

பைனான்ஸ் வாங்கி படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தியேட்டர்கள் திறக்கப்படாததால் ஒடிடி தளத்தில் சிலர் படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர். இதன் காரணமாக நடிகர், நடிகைகள் தங்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

இதையடுத்து தமிழில் முதல் நடிகராக விஜய் ஆண்டனி தனது சம்பளத்தைக் குறைத்து அறிவித்தார். இதையடுத்து மேலும் சில நடிகர், நடிகைகள் குறைப்பதாகக் கூறினர். இந்நிலையில், கேரளத் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், நடிகர், நடிகைகள் டெக்னீஷியன்கள் தங்கள் சம்பளத்தில் பாதியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

சினிமா படப்பிடிப்பு

சினிமா படப்பிடிப்பு

அதை நடிகர் சங்கம் ஏற்றுக் கொண்டு சம்பளத்தை குறைக்க முடிவு செய்தது. இந்நிலையில் லாக்டவுன் தளர்வுகளுக்குப் பிறகு சினிமா படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன. மலையாள நடிகர் சங்க தலைவரும் டாப் ஹீரோவுமான மோகன் லால் நடிக்கும் த்ரிஷ்யம் 2 உள்பட 11 மலையாளப் படங்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட உள்ளன.

மோகன் லால்

மோகன் லால்

இதில் பங்கேற்கும் நடிகர், நடிகைகளின் சம்பள விவரங்களை மலையாள தயாரிப்பாளர் சங்கம் கேட்டது. அதில் மோகன்லால், கொரோனாவுக்கு முன் வாங்கியதில் இருந்து பாதியாக சம்பளத்தைக் குறைத்துள்ளார். அதே போல பல நடிகர், நடிகைகள் குறைத்துள்ள நிலையில் இளம் ஹீரோக்கள் சம்பளத்தை அதிகரித்துள்ளது தயாரிப்பாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

டோவினோ தாமஸ்

டோவினோ தாமஸ்

மலையாள நடிகர் டோவினோ தாமஸ், கொரோனாவுக்கு முன் ரூ.75 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார். அவர் இப்போது ஒரு கோடி ரூபாய் கேட்டுள்ளார். மற்றொரு நடிகரான ஜோஜு ஜார்ஜ், தனது சம்பளத்தை ரூ.45 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தி உள்ளார்.

Recommended Video

V-CONNECT | ACTRESS KASTHURI CHAT PART-2 |இன்சூரன்ஸ் குடுங்க சம்பளத்த கம்மி பன்றோம் |FILMIBEAT TAMIL
அனுமதி இல்லை

அனுமதி இல்லை

இதை ஏற்றுக் கொள்ளாத தயாரிப்பாளர்கள் சங்கம், இவர்கள் நடிக்கும் படங்களின் ஷூட்டிங்கை தொடங்க அனுமதி அளிக்கவில்லை. இது தொடர்பாக இயக்குனர்கள் சங்கம் உள்ளிட்ட பிறகு சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X