மோகன்லால் வெளியிடும் பஸ்ட் லூக்…மகிழ்ச்சி தெரிவித்த வாணி போஜன்

சென்னை : நடிகை வாணி போஜன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு முன்னேறி அங்கேயும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.

ஓ மை கடவுளே படத்தில் அசோக் செல்வன் உடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வாணி போஜன் அந்த ஆண்டு சைமா விருது சிறந்த துணை நடிகைக்கான நாமினேஷன் செய்யப்பட்டவர்.

தற்போது நடிகர் பரத்துடன் சேர்ந்து நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றி ஒரு தகவலை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சீரியலில் கொடிகட்டி பறந்த வாணி

சீரியலில் கொடிகட்டி பறந்த வாணி

2010ஆம் ஆண்டு ஒரு நடிகையாக சினிமாத்துறைக்கு வந்த வாணி போஜன் சிறியதொரு கதாபாத்திரத்தில் ஓர் இரவு எனும் படத்தில் நடித்தார். அதன் பிறகு டிவி சீரியல்களில் காலடி எடுத்து வைத்தார். ஜெயா டிவி மற்றும் விஜய் டிவியில் நடிக்க ஆரம்பித்தார். 2013 ஆம் ஆண்டு சன் டிவியில் வெளியான தெய்வமகள் சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார் வாணிபோஜன். இதில் நடித்ததற்காக கலாட்டா நட்சத்திர விருது, சன் குடும்பம் விருது, தமிழ்நாடு ஸ்டேட் விருதுகளை வென்றார். அதை தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு சீரியல் நடித்தாலும் தெய்வமகள் சீரியல் இன் வெற்றிக்கு பிறகு மறுபடியும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு களைப் பெற்றார் வாணி போஜன்.

முதல் பெரிய ஹிட் படம்

முதல் பெரிய ஹிட் படம்

சீரியலில் இருந்து விடைபெற்று மறுபடியும் அவர் நடித்த படம் " meeku maathrame cheptha " எனும் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். கதாநாயகனாக நடித்தவர் இயக்குனர் தருண் பாஸ்கர். பெல்லி சூபுளு எனும் பிளாக்பஸ்டர் படத்தை இயக்கியவர் இவர். இந்த படம் ஓரளவுக்கு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. அதைத் தொடர்ந்து அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்து ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்த ஓ மை கடவுளே படத்தில் வாணிபூஜன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். குடும்பங்கள் கொண்டாடும் சூப்பர் ஹிட் படமாக அது அமைந்தது. அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான JFW விருதையும் வென்றார். ஓ மை கடவுளே படத்தின் வெற்றி அவருக்கு பல பட வாய்ப்புகளை உருவாக்கித் தந்தது.

OTT யில் பிஸி

OTT யில் பிஸி

ஓ மை கடவுளே படத்தின் மூலம் பல படங்களின் வாய்ப்புகள் மட்டுமே இல்லாமல் வெப்சீரிஸ் நடிக்கும் வாய்ப்புகளும் அவர் வீட்டு வாசலை தட்டியது. நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்த Triples வெப்சீரிஸ் இல் அவருக்கு ஜோடியாக வாணிபூஜன் நடித்துள்ளார். ஹாட்ஸ்டார் இல் இது ஒளிபரப்பானது. அதேபோல நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்த ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படத்தில் ஒரு ஜர்னலிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது அமேசான் பிரைம் இல் ஒளிபரப்பப்பட்டது. 2022ஆம் ஆண்டு நேரடியாக நெட்ப்ளிக்ஸ் இன் ஒளிபரப்பான மகான் திரைப்படத்தில் அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதாக ஒரு பேச்சு அடிபட்டது. அது தன்னிடம் கேட்டு இயக்குனர் கட் செய்தார் என வாணிபூஜன் சொல்லி அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 பரத் 50

பரத் 50

தற்போது வாணிபோஜன் கதாநாயகியாக நடிகர் விதார்த் உடன் ஒரு படமும் நடிகர் பரத்துடன் ஒரு படமும் நடித்து வருகிறார். நடிகர் பரத்திற்கு இது ஐம்பதாவது படம். 2003 ஆம் ஆண்டு பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் பரத் 50 படங்களை கடந்து ஒரு அரிய சாதனை செய்துள்ளார். பெயரிடப்படாத இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மோகன்லால் இன்று வெளியிடுகிறார். இதை குறிப்பிட்டு வாணிபோஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் " முழுமையான நடிகர் மோகன்லால் வெளியிடப்போகும் பஸ்ட் லுக் போஸ்டர் வந்துகொண்டிருக்கிறது" என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X