Don't Miss!
- News
ஒரே வார்த்தை.. ‛வீக்’கான ஓபிஎஸ்.. உச்சத்தில் ஈபிஎஸ்..உச்சநீதிமன்ற உத்தரவால் அதிரடி திருப்பம்.. ஏன்?
- Lifestyle
உங்க வீட்டில் செல்வம் அதிகம் சேர வேண்டுமா? அப்ப இந்த பொருட்களை வாங்கி வீட்டுல வையுங்க...
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Sports
விராட் கோலி இனி தேவையில்லை.. இவருக்கு இனி வாய்ப்பு கொடுங்க.. தினேஷ் கார்த்திக் கருத்து
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இன்னும் சில தினங்களில் மரக்கார் ரிலீஸ்… 3வது டீசர் வெளியீடு
திருவனந்தபுரம் : நடிகர் மோகன்லாலின் அசத்தலான நடிப்பில் வரும் டிசம்பர் 2ம் தேதி ரிலீசாக உள்ளது
மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது மரக்கார்.
ஆசிரியர்களை
திருக்குறள்
சொல்ல
சொன்ன
ரம்யா...தண்டனை
கொடுத்த
அக்ஷரா
இந்நிலையில் படத்தின் 3வது டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளார்.

மரக்கார் படம்
நடிகர் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன், பிரபு, ப்ரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், சுனில் ஷெட்டி உள்ளிட்டவர்கள் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள படம் மரக்கார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தை ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

திரையரங்குகளில் ரிலீஸ்
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படம் ரிலீசுக்காக காத்திருந்த நிலையில், முன்னதாக ஓடிடியில் ரிலீஸ் செய்யவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் தற்போது இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாவதுதான் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

வரலாற்று படம்
வரலாற்று பின்புலத்தில் இந்தப் படம் உருவாகியுள்ள நிலையில், படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே தூண்டியுள்ளது. மேலும் படத்தின் மேக்கிங் வீடியோவும் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்தின் பிரம்மாண்டத்தை எடுத்துக்காட்டும் வகையில் இவை அனைத்துமே அமைந்திருந்தன.

3வது டீசர் வெளியீடு
இந்நிலையில் படத்தின் 3வது டீசரை நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த டீசர்களை போலவே இந்த டீசரும் மிரட்டலாக அமைந்துள்ளது. ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் ஆன்டனி பெரும்பாவூர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். மலையாள சினிமா வரலாற்றில் அதிக பொருட்செலவில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

தமிழில் பிரம்மாண்ட ரிலீஸ்
தமிழிலும் கலைப்புலி எஸ் தாணு இந்தப் படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றியுள்ள நிலையில், படம் சிறப்பான வகையில் ரிலீசாக உள்ளது.இந்தப் படத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன், பிரபு உள்ளிட்ட தமிழ் சினிமாவின் நடிகர்களும் நடித்துள்ளதால் படத்திற்கு தமிழ் ரசிகர்கள் சிறப்பான ஆதரவை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.