ஜெயிலர் படத்தில் என்னோட கேரக்டர் அப்படி இருக்கும்.. மோகன்லால் சொன்ன சூப்பரான விஷயம்!
சென்னை: அடுத்த வாரம் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், அந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள மோகன்லால் மலையாள மீடியா ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஜெயிலர் படம் பற்றி பேசியுள்ள வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் மோகன்லால் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மோகன்லால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காதது ரசிகர்களை அப்செட்டாக்கி இருந்த சூழலில் இந்த பேட்டி ரசிகர்களை கூலாக்கி உள்ளது.

மலையாளத்திலும் ஜெயிலர் எனும் பெயரில் லோ பட்ஜெட் படம் ஒன்று உருவாகி இந்த படத்துக்கு பெரும் பஞ்சாயத்தை சமீபத்தில் கூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஜினியுடன் மோகன்லால்: உன்னைப் போல் ஒருவன் படத்தில் கமல்ஹாசன் உடன் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் நடித்து பெரியளவில் ஸ்கோப் செய்திருந்தார்.
நடிகர் விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்த மோகன்லால் சூர்யாவுடன் காப்பான் படத்தில் நடித்திருந்தார். ஏற்கனவே இருவர் உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் மோகன்லால் நடித்துள்ள நிலையில், முதன்முறையாக ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.
ஒவ்வொரு ஸ்டேட்டிலிருந்தும்: ஜெயிலர் படம் மூலம் கண்டிப்பாக கம்பேக் கொடுக்க வேண்டும் என நினைத்த இயக்குநர் நெல்சன் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் முன்னணி நடிகர்களை இந்த படத்தில் இணைத்துள்ளார்.
கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர்கள் மோகன்லால், விநாயகம், தெலுங்கு நடிகர்கள் சுனில், ஜகபதி பாபு மற்றும் இந்தியில் இருந்து ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா, யோகி பாபு, விடிவி கணேஷ் என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருக்கிறது.
ஜெயிலர் அப்டேட் கொடுத்த மோகன்லால்: ஜெயிலர் இசை வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. ஜூலை 28ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவுக்கு மோகன்லால் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை.
இந்நிலையில், மலையாள மீடியா ஒன்றுக்கு மோகன்லால் அளித்த பேட்டியில் ஜெயிலர் படம் சூப்பராக வந்திருக்கு, மேத்யூ ரோலில் நடித்திருக்கிறேன். அது ஒரு சின்ன கேமியோ ரோல் தான். ஆனால், அந்த சீன் வரும் இடம் சிறப்பான ஒரு இடம். நிச்சயம் படம் வெளியானது கொண்டாடுவீங்க, அது என்ன சீன் என்பதை இப்பவே சொல்லிட்டா நல்லா இருக்காது என நைஸாக எஸ்கேப் ஆகிவிட்டார்.


Click it and Unblock the Notifications











