மகன் பிரணவ்-வை அடுத்து.. பிரபல ஹீரோ மோகன்லாலின் மகளும் சினிமாவில் அறிமுகமாகிறார்..!

By

சென்னை: பிரபல ஹீரோ மோகன் லால் இயக்கும் படத்தில் அவர் மகளும் பணிபுரிய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Recommended Video

Miya George Lock Down Wedding • Ashwin Philips, Vettrivel, Cobra, Vikram

பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால். இவர் மலையாளம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, இந்தி மொழியிலும் நடித்து வருகிறார்.

இப்போது மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

குஞ்சலி மரைக்காயர்

குஞ்சலி மரைக்காயர்

16 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் கடல் வழியாக இந்தியாவுக்கு வந்தபோது அவர்களை எதிர்த்து போராடிய குஞ்சலி மரைக்காயர் என்ற வீரரின் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. தமிழில் இதை கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். இதில், குஞ்சலி மரைக்காயராக மோகன்லால் நடித்து இருக்கிறார்.

மஞ்சு வாரியர்

மஞ்சு வாரியர்

கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, அர்ஜுன், மஞ்சு வாரியர், சித்திக் உள்பட பலர் நடிக்கிறார்கள். பிரபு, தங்காடு என்ற கேரக்டரிலும், சுஹாசினி, குஞ்சலி மரைக்காயரின் தங்கை கேரக்டரிலும், அசோக் செல்வன் அச்சுதன் என்ற வில்லன் கேரக்டரிலும் நடிக்கிறார்கள். இந்தப் படம் ரிலீஸ் ஆக இருந்த நிலையில்தான் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இந்தப் படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்

மைடியர் குட்டிச் சாத்தான்

மைடியர் குட்டிச் சாத்தான்

இதற்கிடையே நடிகர் மோகன்லால் படம் இயக்குவதாக அறிவித்திருந்தார். அந்தப் படத்துக்கு "ப்ரோஸ்: கார்டியன் ஆப் காமா'ஸ் டிரஸ்சர் (Barroz: Guardian of D'Gama's Treasure) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 3டி உருவாகும் இந்தப் படத்துக்கு மைடியர் குட்டிச் சாத்தான் படத்தை உருவாக்கிய ஜிஜோ புன்னூஸ் (Jijo Punnoose) கதை எழுதியுள்ளார்.

மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன்

ஒளிப்பதிவாளராக கே.யு.மோகனன் பணியாற்றுகிறார். இவர் மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனனின் தந்தை. இதில் முக்கிய கேரக்டரில் ஸ்பானிஷ் நடிகர்கள் பாழ்வேகா (Paz Vega), ரஃபேல் அமர்கோ ( Rafael Amargo) ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். இதன் ஷுட்டிங்கை ஜூன் மாதமே கோவாவில் தொடங்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா மொத்த திட்டத்தையும் சிதைத்துவிட்டது.

உதவி இயக்குனர்

உதவி இயக்குனர்

இந்நிலையில், இந்தப் படத்தில் மோகன்லாலின் மகள் விஸ்மாயா, உதவி இயக்குனராக பணியாற்ற இருக்கிறார். ஏற்கனவே மோகன்லால் மகன் பிரணவ் மலையாள படங்களில் நடித்து வரும் நிலையில், மகள் விஸ்மாயாவும் சினிமாவுக்கு காலடி எடுத்து வைக்கிறார். அவருடன் நடிகை கீர்த்தி சுரேஷூம் சகோதரி ரேவதி சுரேஷூம் இதில் உதவி இயக்குனராக பணியாற்ற உள்ளனர். இந்தப் படத்துக்கு லிடியன் நாதஸ்வரம் இசை அமைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X