வெளியானது டீசர்.. அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆகிறது மோகன்லாலின் 'த்ரிஷயம் 2..' படக்குழு அறிவிப்பு

By

சென்னை: மோகன்லால் நடித்துள்ள த்ரிஷயம் 2 படம் அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது.

மலையாளத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், 'த்ரிஷ்யம்'.

இதில் மோகன்லால், மீனா, எஸ்தர் அனில், ஆஷா சரத் உட்பட பலர் நடித்திருந்தனர்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

ஜீத்து ஜோசப் இயக்கி இருந்த இந்த படம், மலையாளத்தில் அதிக வசூல் ஈட்டிய படம் என்று கூறப்பட்டது. இந்தப் படம், தமிழில் கமல்ஹாசன், கவுதமி, ஆஷா சரத், நிவேதா தாமஸ் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையாக கமல்ஹாசன் நடித்திருந்தார். இதையும் ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார்.

அடுத்தப் பாகம்

அடுத்தப் பாகம்

ஜிப்ரான் இசை அமைத்திருந்த இந்த படம் தமிழிலும் சூப்பர் ஹிட்டானது. இது தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பிலும் கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடிப்பிலும், இந்தியில் அஜய்தேவ்கன் நடிப்பிலும் ரீமேக் ஆகி வரவேற்பைப் பெற்றது. படம் ரிலீஸான நேரத்தில் இதன் அடுத்தப் பாகம் உருவாவது பற்றி கூறியிருந்தார் ஜீத்து ஜோசப்.

செப்டம்பர் மாதம்

செப்டம்பர் மாதம்

இந்நிலையில், இதன் இரண்டாம் பாகம் த்ரிஷயம் 2 என்ற பெயரில் உருவாகி உள்ளது. கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு செப்டம்பர் மாதம் இதன் ஷூட்டிங் தொடங்கியது. இந்நிலையில் அதற்குள் படத்தை முடித்து விட்டனர். முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், மீனா உட்பட பலர் நடித்துள்ளனர்.

அமேசான் பிரைம்

இந்தப் படத்தின் டீசர் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை வெளியாகி இருக்கிறது. அதோடு இந்தப் படம் ஓடிடியில் அதாவது, அமேசான் ப்ரைமில் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த டீசரை மோகன்லால் தனது ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X