போலீஸ் நிலையத்தில் புதைக்கப்பட்ட மர்மம் வெளியானதா? எப்படி இருக்கு திரிஷ்யம் 2? ட்விட்டர் விமர்சனம்

சென்னை: 2013ம் ஆண்டு மோகன் லால், மீனா நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி உள்ளது.

Recommended Video

த்ரில்லிங் த்ரிஷ்யம் 2… அமேசானில் வெளியாகி… அமோக வரவேற்பு!

தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன் லால் படம் ஒடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் நிலையத்தில் புதைக்கப்பட்ட அந்த மர்மம் இரண்டாம் பாகத்தில் வெளியானாதா? இல்லையா? படம் எப்படி இருக்கு? மக்கள் என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்.

திரிஷ்யம் 2 ரிலீஸ்

திரிஷ்யம் 2 ரிலீஸ்

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால், மீனா, அன்சிபா, எஸ்தர் அனில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள திரிஷ்யம் 2ம் பாகம் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது. 2013ம் ஆண்டு வெளியான முதல் பாகம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. தமிழில் பாபநாசம் எனும் பெயரிலும், தெலுங்கு மற்றும் இந்தியில் திரிஷ்யம் எனும் டைட்டிலிலேயே இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கூஸ் பம்ப்ஸ்

கூஸ் பம்ப்ஸ்

தனது குடும்பத்துக்காக இந்த முறையும் போராடும் ஜார்ஜ் குட்டியின் கதாபாத்திரத்தில் மீண்டும் மோகன் லால் மிரட்டி உள்ளார். படத்தை பார்த்த அனைவரும் படம் கூஸ் பம்ப்ஸ் ஆக இருக்கு என்றும், மறுபடியும் ஒரு சீட் எட்ஜ் த்ரில்லரை இயக்குநர் ஜீத்து ஜோசப்பால் எப்படி கொடுக்க முடிந்தது என்றே வியந்து வருகின்றனர்.

அவுட்ஸ்டாண்டிங்

அவுட்ஸ்டாண்டிங்

திரிஷ்யம் 2 என்னவொரு படைப்புடா சாமி, ஜீத்து ஜோசப் வேற லெவல் ரைட்டிங் போங்க.. அவுட்ஸ்டாண்டிங் எக்ஸ்ட்ராடினரி மைண்ட் என இயக்குநரை அனைத்து ரசிகர்களும் புகழ்ந்து வருகின்றனர். இந்த படத்தையும் பல மொழிகளிலும் நிச்சயம் ரீமேக் செய்வார்கள் என இந்த நெட்டிசன் கூறியுள்ளார்.

தியேட்டரில் வந்திருக்கலாம்

தியேட்டரில் வந்திருக்கலாம்

இந்த வெள்ளிக்கிழமை வெளியான பல படங்களில் முதல் வின்னர் என்றால் அது திரிஷ்யம் படம் தான். தியேட்டரில் வந்திருந்தால் வேற லெவல் கலெக்‌ஷ்னை நிச்சயம் இந்த படம் அள்ளி இருக்கும் என ஏகப்பட்ட ரசிகர்கள், பெரிய திரையில் லாலேட்டனின் அசத்தல் நடிப்பை காண முடியாத குறையை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

கிளைமேக்ஸ் வேற லெவல்

கிளைமேக்ஸ் வேற லெவல்

இந்த முறையும் தனது குடும்பத்தை தனது சினிமா அறிவை கொண்டு ஜார்ஜ் குட்டி காப்பாற்றியுள்ளார் என்று சஸ்பென்ஸையும் உடைத்து ஏகப்பட்ட நெட்டிசன்கள் ட்விட்டரில் விமர்சனங்களையும் படத்தின் கதையையும் சொல்லி வருகின்றனர். போலீஸ் ஸ்டேஷனில் புதைக்கப்பட்ட அந்த மர்மம் இன்னமும் அப்படியே நீடிக்கிறதா? இல்லை ஜார்ஜ் குட்டி எப்படி தப்பிக்கிறார் என்பதை அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள திரிஷ்யம் 2 படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X