twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமீர்கானுக்கு நடந்த அதே பிரச்சனை இப்போ மோகன்லாலுக்கும்.. மரைக்காயர் படம் எப்படி இருக்கு?

    |

    சென்னை: மோகன்லால் நடிப்பில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் திரைப்படம் இன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியானது.

    தேசிய விருதை அள்ளிய இந்த படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்த ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர்.

    இயக்குநர் பிரியதர்ஷன் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளார் என நெட்டிசன்கள் புலம்பித் தள்ளும் ட்விட்டர் விமர்சனத்தை இங்கே காண்போம்.

    சூட்டிங்கை கவனிக்காமல் வெங்கட் பிரபு செய்த காரியம்… சீக்ரெட்டை போட்டுடைத்த கல்யாணி பிரியதர்ஷன்சூட்டிங்கை கவனிக்காமல் வெங்கட் பிரபு செய்த காரியம்… சீக்ரெட்டை போட்டுடைத்த கல்யாணி பிரியதர்ஷன்

    சொதப்பும் சூப்பர்ஸ்டார் படங்கள்

    சொதப்பும் சூப்பர்ஸ்டார் படங்கள்

    ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் தீபாவளிக்கு வெளியானது. ஆனால், அந்த படம் விமர்சன ரீதியாக மட்டுமல்ல பெருவாரியான மக்களை மகிழ்விக்கும் அளவுக்கு கூட இல்லை. அதே நிலை தான் தற்போது வெளியாகி உள்ள மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் படத்திற்கும் ஏற்பட்டுள்ளது என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

    டிராய் படத்தின் காப்பி

    டிராய் படத்தின் காப்பி

    ஹாலிவுட் திரைப்படமான டிராய் படத்தின் காட்சிகளை அப்படியே அப்பட்டமாக காப்பியடித்து இந்த படத்தில் காட்சிகள் வைத்துள்ளனர். இதற்கு மேல் இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கும் படங்களுக்கு ஒரு பைசா கூட செலவு செய்யப் போவதில்லை என மலையாள சினிமா ரசிகர்கள் கடுப்பாகி உள்ள்னர்.

    மோசமான ஸ்க்ரிப்ட்

    மோசமான ஸ்க்ரிப்ட்

    லாலேட்டனுக்கான ஸ்க்ரிப்ட்டே இது கிடையாது. இயக்குநர் பிரியதர்ஷனின் மோசமான ஸ்க்ரிப்ட்டுக்கு எதுக்கு இவ்வளவு கோடி கொட்டி படம் எடுக்கணும் என மலையாள சினிமா ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர். 2ம் பாதி மற்றும் கிளைமேக்ஸ் படு மோசம் என்றும் கொஞ்சம் கூட படம் நல்லா இல்லை என ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

    3 மணி நேரம் உட்கார முடியல

    3 மணி நேரம் உட்கார முடியல

    மோகன்லால், அர்ஜுன், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், சுனில் ஷெட்டி, பிரபு, அசோக் செல்வன், கல்யாணி பிரியதர்ஷன் என ஒரு நட்சத்திர பட்டாளமே படத்தில் இருந்தாலும், வலுவான கதாபாத்திர அமைப்பு இல்லாமல் படம் தடுமாறிவிட்டது. 3 மணி நேரம் உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. இந்த ஆண்டின் இறுதியில் மோகன்லாலுக்கு மிகப்பெரிய டிசாஸ்டர் படமாக இந்த படம் அமைந்துள்ளது என விமர்சித்து வருகின்றனர்.

    அமீர்கானுக்கு நடந்தது போல

    அமீர்கானுக்கு நடந்தது போல

    அமீர்கான், அமிதாப் பச்சன், கத்ரீனா கைஃப் என நட்சத்திர பட்டாளம் நடிப்பில் வெளியான தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் திரைப்படமும் முழுக்க முழுக்க கப்பல் கான்செப்ட்டிலேயே படமாக்கப்பட்டது. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தை காப்பியடித்து பல காட்சிகள் வைத்த நிலையில், அந்த படம் படு தோல்வியை சந்தித்தது. அதே போல மரைக்காயர் படமும் தோல்வி முகத்தை தழுவியுள்ளது என கூறி வருகின்றனர்.

    பிரம்மாண்ட படங்கள் என்னாகுமோ?

    பிரம்மாண்ட படங்கள் என்னாகுமோ?

    திரிஷ்யம் 2 திரைப்படம் மோகன்லாலுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. ஆனால், மரைக்காயர் சொதப்பி விட்டது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என அடுத்தடுத்து ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், பிரபாஸின் ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்கள் என்ன ஆகுமோ? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    English summary
    Mohanlal’s over expected Marakkar Arabikkadalinte Simham highly disappointed his fans and Malayalam Cinema fans for a very poor script and making by Director Priyadarshan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X