அடுத்த மிரட்டல்.. மோகன் லாலின் பிரம்மாண்ட படம் தியேட்டரில் வெளியாகிறது.. ரிலீஸ் எப்போ தெரியுமா?
சென்னை: திரிஷ்யம் 2 படத்தை ஒடிடியில் வெளியிட்டு மிரட்டிய மோகன் லால் தனது அடுத்த பிரம்மாண்ட படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் எனும் தலைப்பில் மலையாள திரையுலகிலேயே அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம்.
இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், அர்ஜுன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

கொரோனாவால் தாமதம்
கடந்த ஆண்டு சம்மருக்கு வெளியாக வேண்டிய இந்த படம் கொரோனா காரணமாக தாமதமாகி இந்த ஆண்டு சம்மருக்கு வெளியாகிறது. மலையாள திரையுலகிலேயே மிக அதிகமான பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை மோகன் லால் அறிவித்துள்ளார்.

குஞ்சலி மரைக்காயர்
இங்கிலாந்தை சேர்ந்த கிழக்கு இந்திய கம்பெனியினர் இந்தியாவிற்கு ஊடுருவ காரணமாக இருந்த போர்த்துகீசிய படைகளை துவம்சம் செய்த குஞ்சலி மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கமாக பார்க்கப்பட்டார். அப்பேற்பட்ட சுதந்திர போராட்ட வீரரின் கதையை இயக்குநர் பிரியதர்ஷன் நடிகர் மோகன் லாலை வைத்து இயக்கி உள்ளார்.
ஏகப்பட்ட பிரபலங்கள்
நடிகை கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன், பிரபு, சுஹாசினி, சுதீப், நெடுமுடி வேணு, சித்திக் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

எப்போ ரிலீஸ்
வரும் மே மாதம் 13ம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் வெளியாகும் என நடிகர் மோகன் லால் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டுள்ளார். லாலேட்டனின் ரசிகர்கள் ஆவலோடு இந்த படத்திற்கு காத்திருந்த நிலையில், மே மாதம் மலையாள திரையுலகில் இந்த படம் பெரும் வெற்றியை குவிக்கும் என தெரிகிறது.

திரிஷ்யம் 3 கிளைமேக்ஸ் ரெடி
அமேசான் பிரைமில் வெளியான திரிஷ்யம் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. திரிஷ்யம் 3 வருமா என்ற கேள்வியை சமீபத்தில் இயக்குநர் ஜீத்து ஜோசப்பிடம் கேட்ட போது, திரிஷ்யம் 3 கிளைமேக்ஸ் ரெடி. ஆனால், முழு கதையையும் சுவாரஸ்யமாக உருவாக்கிய பின்னரே அது குறித்து பேச முடியும் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











