மரைக்காயர் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

சென்னை : மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மரைக்காயர்.

மோகன்லால் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

வரும் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மரைக்காயர் படம்

மரைக்காயர் படம்

நடிகர் மோகன்லால், மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜுன், சுனில் ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் மரைக்காயர். இந்தப் படம் உலகளவில் வரும் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் ரிலீஸ்

திரையரங்குகளில் ரிலீஸ்

கடந்த இரண்டு ஆண்டுகளாக ரிலீசுக்காக இந்தப் படம் காத்திருந்த நிலையில், முன்னதாக ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்த நிலையில் தற்போது இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது.

பிரம்மாண்ட தயாரிப்பு

பிரம்மாண்ட தயாரிப்பு

வரலாற்று பின்புலத்தில் மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் இந்தப் படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. காட்சியமைப்புகள் அனைத்தும் மிரட்டலாக உள்ளது டீசர் மற்றும் ட்ரெயிலர் உள்ளிட்டவற்றின் மூலம் சிறப்பாக காணப்படுகிறது.

ரிலீசுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்

ரிலீசுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்

இந்நிலையில் இந்தப் படத்தை திரையரங்குகளில் காணும் அனுபவத்தை ரசிகர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் தந்துள்ளது மிகுந்த ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் இந்தப் படம் ஒரே நேரத்தில் ரிலீசாக உள்ளது. படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

வீ கிரியேஷன்ஸ் வெளியீடு

வீ கிரியேஷன்ஸ் வெளியீடு

இந்தப் படம் தமிழிலும் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்ற பெயரில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான வீ கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு கைப்பற்றியுள்ளார். தமிழகத்தில் மிகவும் அதிகளவில் ரிலீசாக உள்ள முதல் மலையாள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகுதியான பொருட்செலவு

மிகுதியான பொருட்செலவு

மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி உலகளவில் ரசிகர்கள் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். உண்மைக்கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X