மார்ச் மாதம் இல்லையாம்.. மோகன்லாலின் அந்த மெகா பட்ஜெட் பட ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு!
கொச்சி: மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்ற படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பிரியதர்ஷன் இயக்கத்தில், உருவாகி இருக்கும் மலையாளப் படம், 'மரைக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்'.
மெகா பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த வரலாற்றுப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது.

16 ஆம் நூற்றாண்டு
இந்தப் படத்துக்கு தமிழில், மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம் என்று டைட்டில் வைத்துள்ளனர். 16 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள், கடல் வழியாக இந்தியாவுக்கு வந்தபோது அவர்களை எதிர்த்து போராடிய குஞ்சலி மரைக்காயர் என்ற வீரரின் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

மஞ்சு வாரியர்
இதில், குஞ்சலி மரைக்காயராக, மோகன்லால் நடித்து இருக்கிறார். கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, அர்ஜுன், மஞ்சு வாரியர், சித்திக் உட்பட பலர் நடிக்கிறார்கள். பிரபு, தங்காடு என்ற கேரக்டரிலும், சுஹாசினி, குஞ்சலி மரைக்காயரின் தங்கை கேரக்டரிலும், அசோக் செல்வன் வில்லன் கேரக்டரிலும் நடிக்கிறார்கள்.

கலைப்புலி தாணு
இந்தப் படத்தை தமிழில், கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். இந்தப் படத்தின் டிரைலர் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் கடந்த வருடம் மார்ச் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வருடம் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்ட அதே தேதியில் இந்த வருடம் வெளியிட இருப்பதாகக் கூறப்பட்டது..

தள்ளி வைப்பு
தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர், இதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார். ஆனால், இப்போது இதன் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைக்கப் பட்டுள்ளது. எப்போது ரிலீஸ் என்று தேதி அறிவிக்கப்படவில்லை. கொரோனா
முழுவதுமாக ஓய்ந்த பிறகு படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஓணம் பண்டிகைக்கு வெளியாகலாம் என்றும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











