twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டேட் மாற மாட்டோம்.. அதே மாதம், அதே தேதியில் ரிலீஸ் ஆகிறது மோகன்லாலின் பிரம்மாண்ட வரலாற்றுப் படம்!

    By
    |

    கொச்சி: கொரோனா காரணமாக, தள்ளி வைக்கப்பட்டிருந்த மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    Recommended Video

    South Celebrity Then and Now Photoshop Looks | Surya, Ajith, Dulquer Salaman - Shameem Lukman

    மலையாளத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் வரலாற்றுப் படம் 'மரைக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்'.

    இந்தப் படத்துக்கு தமிழில், மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்று டைட்டில் வைத்துள்ளனர்.

    குஞ்சலி மரைக்காயர்

    குஞ்சலி மரைக்காயர்

    16 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள், கடல் வழியாக இந்தியாவுக்கு வந்தபோது அவர்களை எதிர்த்து போராடிய குஞ்சலி மரைக்காயர் என்ற வீரரின் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இதில், குஞ்சலி மரைக்காயராக, மோகன்லால் நடித்து இருக்கிறார்.

    வில்லன் கேரக்டர்

    வில்லன் கேரக்டர்

    கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, அர்ஜுன், மஞ்சு வாரியர், சித்திக் உட்பட பலர் நடிக்கிறார்கள். பிரபு, தங்காடு என்ற கேரக்டரிலும், சுஹாசினி, குஞ்சலி மரைக்காயரின் தங்கை கேரக்டரிலும், அசோக் செல்வன் அச்சுதன் என்ற வில்லன்
    கேரக்டரிலும் நடிக்கிறார்கள். தமிழ், மலையாளம், இந்தி உட்பட 5 மொழிகளில் படத்தை வெளியிடுகின்றனர்.

    பெருமை கொள்கிறேன்

    பெருமை கொள்கிறேன்

    பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்தப் படத்தை தமிழில், கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். இதுபற்றி அவர், 'சிறைச்சாலை படத்துக்குப் பிறகு மீண்டும் பிரமிக்க வைக்கும் ஒரு காவிய படைப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்' என்று ட்விட்டரில் கூறியிருந்தார். இந்தப் படத்தின் டிரைலர் வரவேற்பைப் பெற்றது.

    கொரோனா காரணமாக

    கொரோனா காரணமாக

    கடலும் கப்பலும் போர்க்காட்சிகளும் என மிரட்டிய டிரைலரைப் பார்த்த பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன், நடிகர் மோகன்லாலைப் பாராட்டி இருந்தார். இந்தப் படம் கடந்த வருடம் மார்ச் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

    ரிலீஸ் தேதி

    ரிலீஸ் தேதி

    இந்நிலையில், மோகன்லால் நடித்துள்ள த்ரிஷயம் 2 படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இந்தப் படமும் ஓடிடியில் வெளியாகலாம் என கூறப்பட்டது. ஆனால், படக்குழு அதை மறுத்து ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.

    அந்தோணி பெரும்பாவூர்

    அந்தோணி பெரும்பாவூர்

    கடந்த வருடம் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்ட அதே தேதியில் (மார்ச் 26) இந்த வருடம் வெளியிட உள்ளனர். தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர், இதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். சுமார் 80 கோடி ரூபாயில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    English summary
    producer Antony Perumbavoor has announced that the much-awaited Marakkar: Arabikadalinte Simham will hit theatres on March 26, 2021, exactly a year after its initially planned release date.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X