மோகன் லால் தாயார் கவலைக்கிடம்!

By Shankar

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தாயார் சாந்த குமாரி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சாந்தகுமாரிக்கு வயது 76. சில தினங்களுக்கு முன் அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டார். அப்போது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.

இதனால் சாந்தகுமாரிக்கு உடலில் ஒரு பகுதி செயல் இழந்தது. டாக்டர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்தனர். ஆனாலும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவசர பிரிவில் வைத்து தீவிர சிசிச்சை அளித்து வருகின்றனர்.

இப்போது 'கிராண்ட் மாஸ்டர்ஸ்' மலையாள படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால். இதன்படப்பிடிப்பும் எர்ணாகுளத்தில்தான் (கொச்சி) நடக்கிறது. தாயின் உடல்நிலை மோசமடைந்தை அறிந்ததும் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு மருத்துவமனையிலேயே தங்கி கவனித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X