மலையாள சினிமாவையே இழுத்து மூடுறாங்களா?.. கடுப்பாகாமல் மோகன்லால் கொடுத்த தக் லைஃப் பதில்!

சென்னை:பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள எம்பிரான் திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. இந்திய அளவில் அந்த படத்தை படக்குழு உடன் சேர்ந்து மோகன்லால் பல்வேறு நகரங்களுக்கு சென்று புரமோட் செய்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கொஞ்சம் கோபப்படாமல் மோகன்லால் அளித்த பதில் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

கடந்த ஆண்டு மலையாள திரை உலகில் பல வெற்றி படங்கள் வெளியாகின. சினிமா உலகம் சந்தோசமாக இருந்து வந்த சூழ்நிலையில், திடீரென சில நடிகைகள் கிளப்பிய பாலியல் தொல்லை பஞ்சாயத்து மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியது. மலையாளத் திரை உலகின் நடிகர் சங்கமான அம்மா அமைப்பிலிருந்து மோகன்லால் வெளியேறியது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Mohanlal says no one has the power to shut down Malayalam Cinema Industry

மலையாளத் திரையுலகில் நடிகர்களுக்கு எதிராக சில தயாரிப்பாளர்கள் போர்க்கொடி தூக்கி படப்பிடிப்புகளை ரத்து செய்யும் அளவுக்கு பந்த் பண்ண போவதாக தகவல்கள் வெளியாகி நிலையில், மலையாள திரையுலகம் ஒட்டுமொத்தமாக மூடப்படுகிறது என்று கேள்வியை மோகன்லால் தான் செய்தியாளர் ஒருவர் எழுப்பினார்.

நேத்து வரைக்கும் அப்படி கேள்விப்படல: செய்தியாளர் ஒருவருக்கு கேள்வியை கேட்டு கடுப்பாகாமல் நடிகர் மோகன்லால் அழகாக அவருக்கு அளித்த பதில் பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது. நேற்று வரைக்கும் அப்படி கேள்விப்படலை என்றும், மலையாள திரையுலகத்தை அவ்வளவு எளிதாக மூடிவிட முடியாது. பல லட்சம் மக்கள் வாழ்வாதாரம் அதில் அடங்கியுள்ளது என்றார்.

நல்ல நல்ல படங்கள் வருது: மேலும், மலையாளத்துல பல நல்ல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஏகப்பட்ட படங்கள் வெற்றி படங்களாக மாறி வருகின்றன. நன்றாக இருக்கும் ஒரு திரை உலகத்தை இழுத்து மூடி விட முடியாது என்று தரமான பதிலை மோகன்லால் அளித்துள்ளார். கேள்வி கேட்கத் தெரியாமல் அந்த பத்திரிகையாளர் கேட்டு விட்டார் என்றும் மோகன்லால் அந்த இடத்தில் கோபப்படாமல் அளித்த பதில் சிறப்பு என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

எம்புரான் வசூல் எப்படி இருக்கும்?: இந்திய சினிமாவில் பாலிவுட், டோலிவுட் மற்றும் சாண்டல்வுட் படங்கள் ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி உள்ளன. கோலிவுட்டில் அதிகபட்சமாக 800 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆனால், மலையாளத்தில் உலகில் அதிகபட்சமாக 250 கோடி ரூபாய் அளவுக்கு தான் வசூல் சாதனை நடைபெற்றுள்ளது. இந்நிலையில், பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள மோகன்லாலின் எம்புரான் திரைப்படம் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் வேட்டை நடத்துமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. அதற்கு தேவையான புரமோஷன்களை படக்குழு செய்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் படமாக எம்புரான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கம்பேக் நிச்சயம்: மோகன்லால் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு லூசிஃபர் திரைப்படம் வெளியானது. அதன் 2ம் பாகம் தான் எம்புரான். முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், 2வது பாகம் பான் இந்தியா அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் மோகன்லால், பிரித்விராஜ், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மோகன்லால் நடிப்பில் கடைசியாக வெளியான மலைகோட்டை வாலிபன், பரோஸ் உள்ளிட்ட படங்கள் சொதப்பிய நிலையில், இந்த படம் அவருக்கு கம்பேக் கொடுக்கும் என்கின்றனர்.

FAQs
மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படத்தின் இயக்குநர் யார்?

மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படத்தின் இயக்குநர் பிரித்விராஜ். முதல் பாகமான லூசிஃபர் படத்தையும் அவர் தான் இயக்கினார்.

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X