twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சஞ்சய் தத்துக்கு ஆதரவாகப் பேசிய மோகன்லாலின் லெப்டினன்ட் கர்னல் பதவிக்கு ஆபத்து

    By Siva
    |

    திருவனந்தபுரம்: 1993ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்ட மோகன்லால் பிரச்சனையில் சிக்கியுள்ளார்.

    1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு தடா நீதிமன்றம் அளித்த 6 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் 5 ஆண்டுகளாக குறைத்து கடந்த வாரம் தீர்ப்பளித்தது. ஏற்கனவே 18 மாதங்கள் சிறையில் இருந்ததால் சஞ்சய் 3 ஆண்டுகள் 5 மாதம் சிறையில் இருந்தால் போதும். அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு குரல்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் தான் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் சஞ்சய் தத்துக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் கமெண்ட் போடுள்ளார்.

    ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்ட லால் ஏட்டன்

    ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்ட லால் ஏட்டன்

    கடந்த 20 ஆண்டுகளில் சக கலைஞரும், நண்பருமான சஞ்சய் தத் திருந்தி ஒரு நல்ல குடிமகனாக, குடும்பஸ்தனாக, நல்ல மனிதராக உள்ளார். இந்த அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அவருக்கு நம் அன்பும், உதவியும் கண்டிப்பாக தேவை. அவருக்கு மன்னிப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன், அதற்காக பிரார்த்திக்கிறேன் என்று மோகன்லால் ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டுள்ளார்.

    ஃபேஸ்புக் கமெண்ட்டால் வந்த வினை

    ஃபேஸ்புக் கமெண்ட்டால் வந்த வினை

    ஃபேஸ்புக்கில் மோகன்லாலின் கமெண்ட்டைப் பார்த்த சிலர் ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கும் ஒருவர் தீவிரவாத வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவருக்கு ஆதரவாக பேசலாமா என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    லெப்டினன்ட் கர்னல் பதவியை பறியுங்கள்

    லெப்டினன்ட் கர்னல் பதவியை பறியுங்கள்

    குண்டுவெடிப்பு வழக்கில் சிறை சென்றவருக்கு வக்காலத்து வாங்கும் மோகன்லாலின் லெப்டினன்ட் கர்னல் பதவியை பறிக்குமாறு குரல்கள் வலுத்து வருகிறது.

    English summary
    Mohanlal recently posted a message in favour of Bollywood megastar Sanjay Dutt, who is right now sentenced to five year imprisonment. Well, this post did not go very well with a certain section of the people and, hence there has been a strong demand to withdraw the Lieutenant Colonel of the Territorial Army honour that Mohanlal has been bestowed with.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X