ரிலீசுக்கு முன்பே லீக்கான திரிஷ்யம் 2 டிரைலர்.. அதிரடியாக மோகன் லால் செய்த காரியம்.. வேற லெவல்!
திருவனந்தபுரம்: இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால் நடித்துள்ள திரிஷ்யம் படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
கடந்த 2013ம் ஆண்டு வெளியான திரிஷ்யம் திரைப்படம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அமேசான் பிரைமில் விரைவில் அதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.

சீட் எட்ஜ் த்ரில்லர்
கடந்த 2013ம் ஆண்டு வெளியான மலையாளத்தில் வெளியான மோகன் லாலின் திரிஷ்யம் திரைப்படம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கிய அந்த திரைப்படம் ஏகப்பட்ட விருதுகளையும் வென்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

பல மொழிகளில் ரீமேக்
தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம், தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் திரிஷ்யம் என்கிற டைட்டிலியே அந்த திரைப்படம் வெளியாகி அனைத்து மொழிகளிலும் பெரிய வெற்றி பெற்றது. கடைசி கிளைமேக்ஸ் வரை ட்விஸ்ட் உள்ள அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது.

திரிஷ்யம் 2
நாடு முழுவதும் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அமேசான் பிரைமிலேயே மோகன் லாலின் திரிஷ்யம் 2 வரும் பிப்ரவரி 19ம் தேதி வெளியாகிறது. அதன் டிரைலரை படக்குழு வரும் 8ம் தேதி வெளியிட திட்டமிட்டு அறிவிப்பும் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

லீக்கான டிரைலர்
ரிலீசுக்கு முன்னதாக திரைப்பட காட்சிகளே லீக் ஆகி வரும் நிலையில், திரிஷ்யம் டிரைலர் மட்டும் என்ன விதிவிலக்கா? என்பது போல, இன்றே இணையத்தில் திரிஷ்யம் 2 டிரைலர் லீக்காகி வைரலானது. இதனால் நடிகர் மோகன் லால் மற்றும் படக்குழுவினர் ரொம்பவே அப்செட் ஆனார்கள்.

முடிவெடுத்த மோகன் லால்
லீக் ஆகிடுச்சு, இனியும் தாமதம் செய்தால் நல்லா இருக்காது, உடனடியாக டிரைலரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு விடலாம் என முடிவெடுத்த மோகன் லால் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜார்ஜ் குட்டி மற்றும் அவரது குடும்பத்தினரின் புதிய பிரச்சனையை சந்தியுங்கள் என அந்த டிரைலரை வெளியிட்டுள்ளார்.
பழைய வழக்கு
7 வருஷத்துக்கு முன்னர் வந்த ஒரு படத்தின் அடுத்த பாகம் அதே கதையின் தொடர்ச்சியாக வெளியாவதால் ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமுடன் உள்ளனர். காவல் நிலையத்தின் கீழே புதைக்கப்பட்ட பிணம் தோண்டியெடுக்கப்படுமா? இந்த முறை ஜார்ஜ் என்ன செய்து தனது குடும்பத்தை காப்பாற்றப் போகிறார்? என்பதை பார்க்க ஒட்டுமொத்த இந்திய திரைத்துறையினரும் ஆவலோடு உள்ளனர்.


Click it and Unblock the Notifications











