Mohanlal: மலைக்கோட்டை வாலிபன் ஃபர்ஸ்ட் லுக்... மோகன்லாலா இது... இதனாலதான் கமல் எஸ்கேப் ஆகிட்டாரா?

திருவனந்தபுரம்: மோகன்லால் தற்போது மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது.
இந்நிலையில், ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த மலைக்கோட்டை வாலிபன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
மோகன்லாலின் வித்தியாசமான லுக்கில் வெளியாகியுள்ள இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

மலைக்கோட்டை வாலிபன் ஃபர்ஸ்ட் லுக்
மல்லுவுட் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் மான்ஸ்டர், Alone ஆகிய படங்கள் இறுதியாக வெளியாகின. அதனைத் தொடர்ந்து அவர் மலைக்கோட்டை வாலிபன் படத்தில் பிஸியாக நடித்து வந்தார். லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் முதல் படம் இது என்பதால், அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

 Mohanlal starrer Malaikottai Vaaliban first look poster out now

அங்கமாலி டைரிஸ், ஈ மா யு, ஜல்லிக்கட்டு படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. சமீபத்தில் மம்முட்டி நடிப்பில் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தை இயக்கி வியக்க வைத்தார். இந்நிலையில், மோகன்லால் நடிப்பில் மலைக்கோட்டை வாலிபன் படத்தை அவர் இயக்குவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. வித்தியாசமான தோற்றத்தில் இரண்டு பெரிய கயிறுகளால் நிலாவை இழுக்கும் மல்யுத்த வீரன் போல மோகன்லால் இந்த போஸ்டரில் மிரட்டுகிறார். மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம், சுதந்திரத்திற்கு முன்பு வாழ்ந்த இந்தியாவின் பிரபல மல்யுத்த வீரர் காமா என்கிற குலாம் முகமது பக்ஷ் என்பவரின் பயோ பிக் என சொல்லப்பட்டது.

மேலும், குலாம் முகமது பக்ஷ் கேரக்டரில் தான் மோகன்லால் நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை மலைக்கோட்டை வாலிபன் படக்குழு மறுத்துவிட்டது. அதேபோல், கமல், கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி ஆகியோரை இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் கமல்ஹாசன் இந்தியன் 2 ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால் மறுத்துவிட்டாராம். ரிஷப் ஷெட்டியும் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.

 Mohanlal starrer Malaikottai Vaaliban first look poster out now

மலைக்கோட்டை வாலிபன் படத்தை ஜான் மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி பிலிம்ஸ், மேக்ஸ் லேப் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மாரில் தொடங்கியது. இதையடுத்து விரைவில் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வார் டிராமா ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்திற்கு பி.எஸ். ரஃபீக் திரைக்கதை எழுத, மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார்.

மோகன்லால் - லிஜோ ஜோஸ் பெல்லிசேரி கூட்டணி நிச்சயமாக தரமான விஷுவல் ட்ரீட் கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். மலையாளம் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு உட்பட மற்ற மொழிகளிலும் இந்தப் படம் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தற்போது வெளியான மலைக்கோட்டை வாலிபன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X