காப்பி ரைட் பிரச்னையே இல்லை.. இளையராஜாவிடம் பாடல்களுக்கு அனுமதி வாங்கியது நிம்மதி.. தொடரும் படக்குழு ஓபன்!
சென்னை: இசைஞானி இளையராஜா என்றாலே இப்போது பலரும் விமர்சனம் செய்யும் ட்ரால் மெட்டீரியலாக மாறிவிட்டார். தனது பாடலுக்கான காப்பிரைட் உரிமையை அவர் கோரினாலே அவரை பணத்தாசை பிடித்தவர் என்று கூறும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. ஆனால், கங்கை அமரன் கூறியது போல, இளையாராஜாவிடமே செலவு செய்ய முடியாத அளவுக்கு பணம் கொட்டிக்கிடக்கிறது என்பது உண்மை. ஆனால், இளையராஜா காப்பி ரைட் உரிமம் தொடர்பான வக்கீல் நோட்டீஸ் அனுப்புவது என்பது யாருக்கு என்று பார்த்தால், அவர் செய்தது நியாயம் என்பது புரியவரும்.
அதாவது, தனது பாடல்களை பயன்படுத்தும்போதோ, அல்லது அவற்றை ரீமிக்ஸ் செய்யும்போதோ தன்னிடம் முறையான அனுமதி கேட்டால் ஒரு ரூபாய் கூட பணம் பெற்றுக் கொள்ளாமல், அவர்களுக்கு மன மகிழ்ச்சியுடன் தனது பாடல்களை பயன்படுத்த அனுமதி தருகிறார். கடந்த ஆண்டு வெளியான படமான லப்பர் பந்து படத்தில், நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் பாடல் பயன்படுத்தப்பட்டது. இந்த பாடலை பயன்படுத்துவதற்கு முன்னர், படக்குழு இசைஞானி இளையராஜாவை சந்தித்து, படத்தின் கதையைச் சொல்லி, பாடலைப் பயன்படுத்த அனுமதி வேண்டும் என்று கேட்டபோது, அவர் மிகவும் மனநிறைவுடன் பாடலைப் பயன்படுத்த அனுமதி கொடுத்தார். இது மட்டும் இல்லாமல், பாடலுக்காக ஒரு ரூபாய் பணம் கூட பெற்றுக் கொள்ளவில்லை என்பது நடந்த சம்பவம்.
தன்னிடம் முறையான அனுமதி வாங்காமல் பயன்படுத்தும் பாடல்களுக்குத்தான் ராயல்ட்டி கேட்டு இளையராஜா தரப்பில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்ப படுகிறது. அதேபோல்தான் மலையாளப் படமான துடரும் படத்தில் இளையராஜா பாடல்களை படத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை பயன்படுத்தியுள்ளார்கள். இதற்காக முறையான அனுமதி பெற்று பயன்படுத்தியதால், இசைஞானி இளையராஜா ஒரு ரூபாய் கூட பணம் வேண்டாம் என்று கூறிவிட்டார் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

மோகன்லால்: அதாவது, இந்த ஆண்டில் இருந்து மலையாள சினிமாவில் மோகன்லால் அதிரடியான சாதனைகளை செய்து வருகிறார். அதாவது இவரது நடிப்பில் வெளியான எம்புரான் மற்றும் துடரும் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் அடுத்தடுத்து ரூபாய் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மலையாள சினிமாவின் மார்க்கெட்டினை உயர்த்தி வருகிறார். இது மட்டும் இல்லாமல், இந்த படத்தை தமிழில் தொடரும் என்ற பெயரில் டப் செய்து ரிலீஸ் செய்துள்ளார்கள். தமிழிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தொடரும்: இந்நிலையில் படத்தில் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தியது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்களான, ரஞ்சித் மற்றும் அவரது மனைவி சிப்பியும் பகிர்ந்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, எங்கள் வாழ்க்கையில் இளையராஜா சாரின் பாடல்களுக்கு எப்போதும் சிறப்பான இடம் உண்டு. நாங்கள் தயாரிக்கும் படத்தில் அவரது பாடல்களை பயன்படுத்த வேண்டும் என்பதே எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. எனவே, அவரிடம் முறையான அனுமதி வாங்கி பயன்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.

காப்பி ரைட்: இதனால் அவரை நேரில் சந்தித்து படத்தின் கதையைச் சொன்னோம். படத்தின் கதாநாயகன் கதாபாத்திரம், இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பதையும் சொன்னோம். கதை இளையராஜாவுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதன் பின்னர் அவரது பாடல்களை பயன்படுத்த அனுமதி கொடுத்ததுடன், பணமே வேண்டாம் என்று கூறிவிட்டார். அவரது பாடல்கள் எங்கள் படத்தின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது " என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











