வில்லங்கம் வராதுல்ல... த்ரிஷா படத்துக்கு இதுதான் டைட்டில்
சென்னை: ஜீத்து ஜோசப் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் மலையாளப் படத்துக்கு, ராம் என்று டைட்டில் வைத்துள்ளனர்.
பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப், மலையாளத்தில் இயக்கிய த்ரிஷியம் 2013 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்தி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தை, கமல்ஹாசன் நடிப்பில் ஜீத்து ஜோசப்பே இயக்கினார்.

இந்தப் படமும் தமிழிலும் ஹிட்டானது. இதையடுத்து மலையாளத்தில் சில படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப், தமிழில் தம்பி படத்தை இயக்கியுள்ளார். இதில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், நிகிலா விமல் உட்பட பலர் நடித்துள்ளனர். 20 ஆம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.
இதற்கிடையே அவர் மோகன்லால் நடிப்பில் மீண்டும் படம் இயக்குகிறார். ஆக்ஷன் த்ரில்லர் படமான அதன் ஷூட்டிங் வெளிநாடுகளிலும் நடக்க இருக்கிறது. இந்தப் படத்தில் மோகன்லால் மனைவியாக த்ரிஷா நடிக்கிறார்.
அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை கொச்சியில் நேற்று நடந்தது. ராம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ஓணம் பண்டிக்கைக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். ராம் என்ற கேரக்டரில் மோகன் லால் நடிக்கிறார் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











