twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கைதட்டினா எப்படி சார் வைரஸ் அழியும்? விளக்க முடியுமா? பிரபல ஹீரோவை கண்டபடி விளாசிய நெட்டிசன்ஸ்!

    By
    |

    கொச்சி: கைதட்டினால் கொரோனா எப்படி அழியும் என்று கேட்டு பிரபல ஹீரோவை நெட்டிசன்ஸ் கடுமையாக கலாய்த்துள்ளனர்.

    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த வைரஸ்.

    உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைப் பதினோராயிரத்தை தொட்டுள்ளது.

     உண்மையிலேயே கனிகா ரிப்போர்ட்டா இது.. வயசும் பாலினமும் தப்பா இருக்கே.. கொந்தளிக்கும் குடும்பம்! உண்மையிலேயே கனிகா ரிப்போர்ட்டா இது.. வயசும் பாலினமும் தப்பா இருக்கே.. கொந்தளிக்கும் குடும்பம்!

    தமிழகத்தில்

    தமிழகத்தில்

    இந்தியாவிலும் கொரோனா, பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இருநூறுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

    படப்பிடிப்புகள் ரத்து

    படப்பிடிப்புகள் ரத்து

    இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் அதிகமாகக் கூடும் மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றை 31 ஆம் தேதி மூட உத்தரவிடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள 990 தியேட்டர்கள் மூடப்பட்டன. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டி.வி.சீரியல்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையில் முக்கியமான கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

    ஊரடங்கு உத்தரவு

    ஊரடங்கு உத்தரவு

    இந்நிலையில், நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மோடி, மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும், எனவே, வரும் 22 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை கடை பிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறி இருந்தார். அத்தியாவசிய பணிகளைத் தவிர்த்து வேறு எதற்காகவும் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

    கைதட்டி பாராட்டு

    கைதட்டி பாராட்டு

    அதை கடைபிடிக்கும்படி சினிமா பிரபலங்களும் மக்களுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல், ஊரடங்கை கடைபிடித்தனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அர்ப்பணிப்புடன் செயல்படும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு கைதட்டி பாராட்டுத் தெரிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறியிருந்தார்.

    ரஜினிக்கு பிறகு இவர்

    ரஜினிக்கு பிறகு இவர்

    இதுபற்றி பேசிய நடிகர் மோகன்லால், ஒன்றாக இணைந்து கைதட்டுவது ஒரு செயல்முறை. அந்த ஒலி மந்திரம் போன்று வைரஸையும் பாக்டீரியாக்களையும் அழிக்கக் கூடும் என்று கூறியிருந்தார். இதையடுத்து நெட்டிசன்கள் அவரை வசமாக கலாய்க்கத் தொடங்கிவிட்டனர். 'மோகன்லால்ஜி கைதட்டினா எப்படி பாக்டீரியாவும் வைரஸும் அழியும்னு விளக்கமா சொல்ல முடியுமா? என்று ஒருவர் கேட்டுள்ளார். ரஜினிக்கு பிறகு இவரு... இவங்களை எல்லாம் என்ன செய்யலாம்? என்று சிலரும் கடுமையாக கலாய்த்துத் தள்ளியுள்ளனர்.

    English summary
    Actor Mohanlal trolled for destroy virus by clapping comment
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X