கண்ணூரில் மோகன்லாலுக்கு 2 நாள் ராணுவப் பயிற்சி!

By Staff

Mohanlal
கண்ணூர்: ராணுவத்தில் கௌரவ கர்னல் பதவி பெற்றுள்ள நடிகர் மோகன்லாலுக்கு ஆயுதங்களை கையாள்வது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பலவிதமான கதாப்பாத்திரங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருபவர். மாநில மற்றும் தேசிய அளவிலான விருதுகளையும் குவித்தவர்.

'கீர்த்தி சக்ரா' மற்றும் 'குருஷேத்ரா' உள்ளிட்ட படங்களில் அவர் ராணுவ அதிகாரி வேடத்திலும் நடித்து முத்திரை பதித்திருக்கிறார்.

இந்நிலையில், மோகன்லாலுக்கு, இந்திய ராணுவத்தில் கெளரவ கர்னல் பதவி கடந்த ஆண்டு ஜூலை மாதம் வழங்கப்பட்டது.

இந்திய ராணுவத்தின் எல்லைப்யோர படைப்பிரிவில் அவர் கெளரவ கர்னலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இப்பதவிக்கு நியமிக்கப்படுபவர்கள் ராணுவத்தின் தூதராக செயல்படுவார்கள். ஏற்கனவே, புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் கபில்தேவ் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வரிசையில், மோகன்லாலுக்கு இந்த கெளரவம் கிடைத்துள்ளது.

இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுபவர்கள் குறைந்தபட்ச உடல் தகுதியை பெற வேண்டும், இதற்காக அடிப்படை ராணுவ பயிற்சியிலும் பங்கேற்க வேண்டும்.

எனவே அடுத்த வாரம் 26 மற்றும் 27ம் தேதி கண்ணூரில் உள்ள ராணுவ பயிற்சி நிலையத்தில் மோகன்லால் இரண்டு நாள் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளார்.

"ஆயுதங்களை கையாளும் அடிப்படைப் பயிற்சிகள் தவிர, எல்லையோர படைப்பிரிவில் தூதராக மேறகொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அவருக்கு பயிற்சி அளிக்கப்படும்" என்று கண்ணூர் பயிற்சி நிலைய கமாண்டர் டேவிட்சன் தெரிவித்தார்.

வரும் 27ம் தேதி கண்ணூரில் நடக்க உள்ள வீரர்கள் அணிவகுப்பிலும் மோகன்லால் கலந்துகொள்வார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X