twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இஸ்ரோ விஞ்ஞானி கதையில அந்த ஹீரோதான் நடிச்சிருக்கணும்... ஆனா பாருங்க... இயக்குனர் சொல்லும் சீக்ரெட்!

    By
    |

    திருவனந்தபுரம்: இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கதையை மோகன்லால் நடிப்பில் இயக்க இருந்ததாக இயக்குனரும் நடிகருமான ஆனந்த் மகாதேவன் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். இவர் பணியாற்றிய காலத்தில் இவர் மீது சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதை அடுத்து 1994ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிபிஐ தொடர்ந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிமன்றம் இவரை விடுவித்தது.

    வழக்கு

    வழக்கு

    இதையடுத்து நம்பி நாராயணன் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்றம், விஞ்ஞானி நம்பி நாராயணணுக்கு ரூ.50 லட்ச இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இத் தீர்ப்புக்குப் பின் ஒட்டுமொத்த நாட்டின் கவனமும் இவர் மீது விழுந்தது.

    பயோபிக்

    பயோபிக்

    இதையடுத்து அவர் வாழ்க்கை கதை சினிமாவாகிறது. ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நம்பி நாராயணனாக, மாதவன் நடிக்கிறார். மற்றும் சிம்ரன், ரஜித் கபூர் உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தை மாதவனே தயாரித்து இயக்குகிறார்.

    ஆனந்த் மகாதேவன்

    ஆனந்த் மகாதேவன்

    இந்தப் படத்தை முதலில் ஆனந்த் மகாதேவன் இயக்குவதாக இருந்தது. இவர் தமிழில் கமலின் விஸ்வரூபம், பாபநாசம் படங்களில் நடித்துள்ளார். இந்தியில் பல படங்களையும் இயக்கியுள்ளார்.

    மோகன்லால்

    மோகன்லால்

    இவர் மோகன்லாலை வைத்து, நம்பி நாராயணன் கதையை இயக்க இருந்ததாகத் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் நடக்கும் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட ஆனந்த் மகாதேவன், இதைத் தெரிவித்திருக்கிறார்.

    தயாரிப்பாளர்

    தயாரிப்பாளர்

    அவர் மேலும் கூறும்போது, 'விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதையை நான் உருவாக்க இருந்தேன். அவர் கேரக்டரில் நடிக்க மோகன்லாலிடம் பேசினேன். சம்மதம் தெரிவித்தார். அவர் நடித்திருக்க வேண்டும். ஆனால், தயாரிப்பாளர் கிடைக்கவில்லை.

    பணம்

    பணம்

    அது கமர்சியல் கதையாக இருந்தாலும் வழக்கமான பார்முலா கதையாக இல்லாததால் தயாரிப்பாளர் கிடைக்காமல் போனது. அந்தக் கதையில் அதிக தனித்தன்மைகள் இருந்தன. இருந்தாலும் இங்குள்ள மக்களுக்கு பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கிறது.

    இப்படித்தான்

    இப்படித்தான்

    சர்வதேச அளவில் ஒரு கதையை கொண்டு செல்வதற்கு இங்கு யாருக்கும் விருப்பம் இல்லை. இது கேரளாவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே இப்படித்தான் இருக்கிறது' என்று தெரிவித்திருக்கிறார் ஆனந்த் மகாதேவன்.

    English summary
    Famous filmmaker Anand Mahadevan had planned to do a film with Mohanlal portraying the life of ISRO scientist Nambi Narayanan. Mohanlal was fixed for the lead role and he had agreed to do it.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X