ஜெயிலர் படத்தில் மோகன்லால் நடிக்கிறாரா? பெரிய சம்பவம் செய்ய காத்திருக்கும் நெல்சன்!
சென்னை: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் மோகன்லால் கேமியோ ரோலில் நடிக்கப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீப காலமாக சினிமாவில் பிரபல நடிகர்களை கேமியோவாக அழைத்து வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவது முதல் பாக்ஸ் ஆபிஸ் வேட்டைக்கு வரை அவர்களை பயன்படுத்துவது வழக்கமாக மாறி உள்ளது.
கடந்த ஆண்டு வெளியான கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் மாதவனின் ராக்கெட்ரி படத்திலும் சூர்யா கேமியோவாக மாஸ் காட்டி இருந்தார்.

ஷாருக்கான் முதல் சூர்யா வரை
சினிமாவில் கேமியோவாக நடிக்க முன்னணி ஹீரோக்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் நடித்து வருவது ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ராக்கெட்ரி படத்தில் ஷாருக்கான், சூர்யா கேமியோவாக நடித்திருந்தனர். லால் சிங் சத்தா, பிரம்மாஸ்திரா படங்களில் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடித்திருந்தார். விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா மிரட்டியது இன்னமும் ரசிகர்கள் கண்களை விட்டு அகலவில்லை.

ஜெயிலர் படத்தில் மோகன்லால்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக பரபரப்பு தகவல்கள் சினிமா உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. மலையாள திரையுலகின் நம்பர் ஒன் நடிகரான மோகன்லால் ஜெயிலர் படத்தில் இணைந்தால் கேரளாவிலும் மிகப்பெரிய வசூல் வேட்டை கன்ஃபார்ம்.

சிவராஜ்குமார்
ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் நடித்து வருகிறார். இந்நிலையில், மலையாள திரையுலகின் முன்னணி நடிகரும் நடிக்கிறார் என்றால் ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலேயே படம் வேறலெவல் கலெக்ஷனை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி - மம்மூட்டி
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தில் ரஜினிகாந்த் உடன் மலையாள நடிகர் மம்மூட்டி இணைந்து நடித்திருப்பார். அதே போல கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் மற்றும் விஜய்யின் ஜில்லா உள்ளிட்ட படங்களில் மோகன்லால் இணைந்து நடித்திருப்பார். மம்மூட்டியை தொடர்ந்து மோகன்லால் உடன் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கப் போகிறாரா? இருவரும் ஸ்க்ரீனில் வந்தால் திரை தீப்பிடிக்குமே என ரசிகர்கள் கூஸ்பம்ப்ஸ் அடைந்து வருகின்றனர்.

சம்மர் சம்பவம்
ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் முத்துவேல் பாண்டியனின் வேட்டை வரும் சம்மரில் பெரிய சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிடுமா? அல்லது படத்தின் ரிலீஸ் சமயத்தில் அறிவிக்குமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்..


Click it and Unblock the Notifications











