கமலுக்கு மலையாள சூப்பர் ஸ்டார் கொடுத்த சர்ப்ரைஸ்.. அதுக்கும் சேர்த்தே வாழ்த்து சொல்லிட்டாரு!
சென்னை: தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றிய மலையாள சூப்பர் ஸ்டரான மோகன் லால் கமலின் அரசியல் பயணத்துக்கும் சேர்த்தே வாழ்த்து கூறினார்.
நடிகர் கமல் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பும் நடைபெற்றதால் அங்கேயும் கமலுக்கு அசத்தல் சர்ப்ரைஸ் கொடுக்கப்பட்டது.
அதன் ஒருபகுதியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெலுங்கு பிக்பாஸ் தொகுப்பாளரான நாகார்ஜூனா, தனது ஹவுஸ்மெட்டுகளுடன் வாழ்த்து கூறினார்.

வீடியோ மூலம்
அவரை தொடர்ந்து மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் நடிகர் மோகன் லாலும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி மேடையில் தோன்றினார். கமலின் பிறந்தநாளை முன்னிட்டு வீடியோ மூலம் வாழ்த்து கூறினார் மோகன் லால்.

தெய்வம் உங்களுக்கு கொடுக்கட்டும்
அவர் பேசியதாவது, என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.. உங்களை போன்ற பிக்பாஸ் தொகுப்பாளர்களுக்கு நடுவே நானும் மலையாளத்தில் தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சி. இன்னும் நாங்கள் ஆச்சரியப்படக்கூடிய செயல்களை செய்வதற்கான ஆரோக்கயமும் ஆயுளையும் தெய்வம் உங்களுக்கு கொடுக்கட்டும்.

கமல் நன்றி
தங்களின் புதிய லட்சியங்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள் என்று கூறினார். அதற்கு கமல் என் நண்பருமான சகோதரருமான மோகன் லாலுக்கு நன்றி. அங்கிருந்து அவருடைய வாழ்த்தை கூறியதில் மகிழ்ச்சி.

திரிவேனி சங்கமம்
தமிழ் சினிமாவுக்கும் முன்பாக என்னை ஏற்றுக் கொண்டு நம்பிக்கை அளித்த மலையாள சினிமாதான். அதிலிருந்து ஒரு குரல் ஒலித்தது எனக்கு இதமாக இருந்தது என கூறினார். மேலும் இந்த ஆண்டு தன்னுடைய பிறந்தநாள் சிறப்பான ஒன்று, திரிவேனி சங்கமமாய் ஆனது பிக்பாஸ் மேடை.

கன்னடம் மிஸ்ஸிங்
ஆந்திராவில் இருந்து நாகார்ஜூனா கேரளாவில் இருந்து மோகன் லால் என இங்கிருந்த நான் என இது ஒரு திரிவேனி சங்கமமாய் இருந்தது. கன்னடமும் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும் என்று கூறினார் கமல்.


Click it and Unblock the Notifications