Drishyam 3 Public Review: கடைசி 40 நிமிடம் வேறலெவல்.. மோகன்லால் மாஸ்டர் ஆக்டிங்.. த்ரிஷ்யம் 3 விமர்சனம்!
சென்னை: ஜீத்து ஜோசப் தான் மீண்டும் ஒரு மாஸ்டர் மைண்ட் ஃபிலிம் மேக்கர் என த்ரிஷ்யம் 3 படத்தின் மூலம் நிரூபித்துள்ளார். மூன்றாவது பாகத்துடன் த்ரிஷ்யம் சீரிஸுக்கு எண்ட் கார்டு போட்டு விடுவார்கள் என்று பார்த்தால் ஜீத்து ஜோசப்பால் இன்னும் எத்தனை பாகங்கள் கூட எடுக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார். அதிலும், அந்த கடைசி 40 நிமிடங்கள் தான் படம் பக்கா என த்ரிஷ்யம் 3 படத்தை பார்த்த மக்கள் தங்களது விமர்சனங்களை தியேட்டர் வாசலில் கொடுத்து வருகின்றனர்.
பட்டாசுக்கு த்ரி வைப்பது போல முதல் பாதி முழுக்கவே ஸ்லோ பர்னாக மெதுவாக செல்லும் படம் கடைசி 40 நிமிடங்களில் த்ரிஷ்யம் ரசிகர்கள் எதிர்பார்த்த ஏகப்பட்ட ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் நிறைந்து படம் சரவெடியாக வெடிப்பதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மோகன்லால், மீனா, ஆஷா சரத், அன்ஷிபா மற்றும் எஸ்தர் அனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பற்றி பொதுமக்கள் கூறிய கருத்துக்களை இங்கே பார்க்கலாம் வாங்க..
த்ரிஷ்யம் 3 அடிபொலி: இந்த முறையும் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி ரசிகர்களை ஏமாற்றவில்லை. முதல் பாதி என்ன படம் ஆரம்பிக்கவே இல்லையே என ரசிகர்கள் சீட்டில் நெளிய தொடங்கினாலும், அனைத்துக்கும் படத்தின் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பைக் கூட்டி ஜீத்து ஜோசப் தான் ஒரு ஜித்து ஜில்லாடி எனக் காட்டியுள்ளார் படம் அடிபொலியாக உள்ளது என தமிழ்நாட்டில் த்ரிஷ்யம் 3 தமிழ் வெர்ஷனை பார்த்த மக்கள் பாராட்டியுள்ளனர்.
லாலேட்டன் மாஸ்டர் தான்: ஒரு சாதாரண சினிமா விரும்பி தனது குடும்பத்துக்கு வரும் பெரிய ஆபத்தை சினிமா படங்களின் உதவிகளுடன் எப்படி முறியடிக்கிறார். அந்த போலீஸ் விசாரணையில் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பது தான் த்ரிஷயம் படத்தின் கதை. 2வது பாகத்தில் ஒரு புத்தகத்தை வைத்து கதை அட்டகாசமாக சென்ற நிலையில், இந்த முறையும் ஒரு சூப்பரான விஷயத்தை இயக்குநர் கையிலெடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
முதல் பாதி போர்: த்ரிஷ்யம் 3 திரைப்படம் முதல் 2 பாகங்களை போல சுவாரஸ்யமாக இல்லை. ஃபர்ஸ்ட் ஹாஃப் பார்த்த போது ரொம்பவே கடுப்பாக இருந்தது. செகண்ட் ஹாஃப் படத்தில் சில ட்விஸ்ட்டுகளை வைத்து ரசிக்க வைத்தாலும், அதற்கு ஈடு கொடுக்கும் அளவுக்கான முதல் பாதியை ஜீத்து ஜோசப் கொடுத்திருக்க வேண்டும். எனக்கு ரொம்பவே வருத்தம் தான் இந்த பாகம் என ஒரு ரசிகர் தனது நெகட்டிவ் விமர்சனத்தை பகிர்ந்துள்ளார்.
நம்பி பார்க்கலாம்: த்ரிஷ்யம் 3 படத்தை நம்பி பார்க்கலாம். மோகன்லால், மீனா உள்ளிட்ட குடும்பத்தினரின் நடிப்பு மீண்டும் மிரள வைக்கிறது. கடைசியாக 4ம் பாகத்துக்கும் லீடு கொடுத்து டைரக்டர் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விடுகிறார். பேட்ரியாட் படம் சொதப்பிய நிலையில், த்ரிஷ்யம் 3 மோகன்லாலுக்கு மாஸ் கம்பேக் ஆக இருக்கும் என்று இன்னொரு ரசிகர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications