Drishyam 3 Twitter Review: வந்துட்டான்யா ஜார்ஜ்குட்டி.. த்ரிஷ்யம் 3 ட்விட்டர் விமர்சனம் இதோ!
சென்னை: மலையாள நடிகை ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால், மீனா நடித்த த்ரிஷ்யம் 3 திரைப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது அனுபவத்தை எக்ஸ் (ட்விட்டர்) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
கதைக்களம் சூப்பர்: படம் பார்த்த ரசிகர் ஒருவர், முதல் இரண்டு பாகங்களின் தொடர்ச்சியாகவே இந்த மூன்றாவது பாகம் தொடங்குகிறது. முதல் இரண்டு பாகங்களை revisit செய்ய வேண்டிய அவசியமே இல்லை 5 நிமிட Glimpse மூலமாகவே முந்தைய கதைகளை திரையில் காட்டிவிடுகிறார்கள். முதல் இரண்டு பாகங்களிலேயே திரிஷ்யம் கதைக்கு கிட்டத்தட்ட ஒரு முடிவு வந்துவிட்டது. அதனால், மூன்றாவது பாகத்தில் என்ன புதுமை இருக்கப் போகிறது என்ற கேள்வி ஆரம்பத்திலேயே தோன்றுகிறது.

முதல் இரண்டு பாகங்களில் போலீசார் மேற்கொண்ட விசாரணையை, இப்போது தனியார் பத்திரிகையாளர் குழு தங்களின் TRP-க்காக ஆராய தொடங்குகிறார்கள். இந்த தனியார் குழு விசாரணை நடத்தி, ஜார்ஜ் குட்டிக்கு எதிராக தடயத்தை கண்டுபிடிக்கிறார்களா? இல்லையா? என்பதுதான் கதைக்களம். முதல் இரண்டு பாகங்களுடன் ஒப்பிடும்போது இந்த பாகம் சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. பார்ப்போம் , இரண்டாம் பாதி வேகம் எடுக்கிறதா என்று பதிவிட்டுள்ளார்.
அற்புதமான திருப்பம்: படம் பார்த்த மற்றொரு இணையவாசி படத்திற்கு நான்கு ஸ்டார் கொடுத்துள்ளார். த்ரிஷ்யம் 3 மீண்டும் ஒருமுறை தரத்தை உயர்த்துகிறது.. சஸ்பென்ஸ் சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பு, ரசிகர்கள் எதிர்பார்த்த அனைத்தையும், அதற்கும் மேலாகவும் த்ரிஷ்யம் 3 கொடுத்துள்ளது. விறுவிறுப்பான கதைசொல்லல், அற்புதமான திருப்பங்கள் கொண்ட உணர்ச்சிபூர்வமாக உள்ளது. மோகன்லால் தனது உச்சகட்ட நடிப்பில், ஒவ்வொரு காட்சியும் அட்டகாசமாக உள்ளது. படத்தில் பிரமிக்க வைக்கும் அனுபவமாகும். அறிவு, சஸ்பென்ஸ், கச்சிதமான கலவையாக உள்ளது. மலையாள சினிமா மீண்டும் ஒருமுறை தங்கத்தை வென்றுள்ளது என பதிவிட்டுள்ளார்.
ஜார்ஜ் குட்டியின் அலப்பறை: மற்றொரு சினிமா பிரியர் தனது விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், த்ரிஷ்யம் 3 முதல் பாதி - வழக்கமான 'Drishyam' பாணியிலான முதல் பாதியாக உள்ளது. ஆனால், கூடுதல் விறுவிறுப்புடன் அமைந்துள்ளது. எதிர்பார்த்தபடியே, இடைவேளை நெருங்கும் வேளையில் படத்தின் வேகம் அதிகரித்தது. இரண்டாம் பாதியில் அரங்கேறவிருக்கும் முக்கிய நிகழ்வுகளுக்குக் களம் தயாராகிவிட்டது. மோகன்லால் வழக்கம் போலவே பிரமாதமாக நடித்துள்ளார். மீனா கடந்த 13 ஆண்டுகளாகத் தொடர்ந்து 'ராணி' கதாபாத்திரத்தின் தன்மையுடனேயே மிளிர்கிறார் என பதிவிட்டுள்ளார்.
சம்பவம் லோடிங்: மற்றொரு இணையவாசி த்ரிஷ்யம் 3 முதல் பாதி, மிகவும் விறுவிறுப்பாக இடைவேளைக் காட்சியுடன் மிகவும் சுவாரசியமாக உள்ளது. ஜார்ஜ்குட்டியின் உணர்ச்சிப்பூர்வமான பக்கத்துடன், பாகம் 1 மற்றும் 2-ஐப் போலவே கையாளப்பட்டுள்ளது. உணர்வுப்பூர்வமான ஈடுபாட்டுடன் கூடிய மெதுவான கதைசொல்லல் சூப்பராக இருக்கு. இரண்டாம் பாதி சம்பவம் லோடிங் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications