யப்பா.. இதுதான் பக்கா மாஸ்.. ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘த்ரிஷ்யம்’.. ரசிகர்கள் குஷி!

சென்னை: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் 11 வருடங்களுக்கு முன்பு மலையாள மொழியில் வெளியான திரைப்படம் த்ரிஷ்யம். மிகப்பெரிய அளவில் வசூலை அள்ளிக்குவித்த இத்திரைப்படம் தற்போது ஹாலிவுட்டில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2013ம் ஆண்டு மோகன்லால், மீனா, ஆஷா சரத் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் த்ரிஷ்யம். ஒரு கொலையை மறைக்க குடும்பமே சேர்ந்து தீட்டும் திட்டம். அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா இல்லையா? இந்த ஒருவரிக்கதையை வைத்து எடுக்கப்பட்ட படம் தான் த்ரிஷ்யம். இதில் நடிகர் மோகன்லால் குடும்ப தலைவராகவும் அவருக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார்.

Mohanlals Drishyam to be remade in Hollywood

த்ரிஷ்யம் திரைப்படம்: இந்த திரைப்படம் வெளியான போது கேரளா மட்டுமன்றி தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் படத்திற்கு மிகுந்த வரவேற்பு இருந்ததால், இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் எடுக்கப்பட்டது. தமிழில் பாபநாசம் என்ற பெயரில் இப்படம் ரீ-மேக் செய்யப்பட்டது. இதில், கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க அவருடன் சேர்ந்து கெளதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் அனில் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் வெறும் நான்காம் வகுப்பு வரை படித்த சாதாரண நபராக கமல் நடித்து, தான் ஒரு நடிப்பு அரக்கன் என்பதை மீண்டும் நிரூபித்து இருப்பார்.

அனைத்து மொழியிலும் ஹிட்: முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2021ம் ஆண்டு த்ரிஷ்யம் இரண்டாம் பாகம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியானது. இந்த படமும் கேரளாவில் பெரிய ஹிட் ஆக அமைந்தது. இதைத்தொடர்ந்து, இதனை இந்தியிலும் அஜய் தேவ்கனை வைத்து ரீ-மேக் செய்தனர். இதற்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் எத்தனை பாகங்கள் எடுத்தாலும் அத்தனை பாகமும் வெற்றி பெறும் அளவிற்கு படம், த்ரிஷயம் இரண்டாம் பாகம் வெளியான போதும், தமிழில் பாபநாசம் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஹாலிவுட்டில்: இந்நிலையில், த்ரிஷ்யம் படம், இந்திய மொழிகளில் ரீ மேக் ஆனதை தாண்டி, தற்போது வெளிநாட்டு மொழிகளிலும் உருவாக்கப்பட உள்ளது. தயாரிப்பாளர் அபிஷேக் பதாக், த்ரிஷ்யம் படம், கொரிய மொழியில் ரீ-மேக் ஆக உள்ளதாக 2023ஆம் ஆண்டு நடைப்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, Gulfstream Pictures மற்றும் JOAT Films நிறுவனங்களுடன் கைக்கோர்த்து, த்ரிஷ்யம் படத்தை ஆங்கில மொழியிலும் ரீ மேக் செய்ய உள்ளன. இதுவரை, ஹாலிவுட் படங்கள் இந்திய மொழியில் ரீ மேக் செய்யப்படும். ஆனால், முதன்முறையாக இந்திய மொழி திரைப்படம் ஒன்று, ஹாலிவுட்டில் ரீ மேக் ஆகவது மலையாள ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X