Malaikottai Vaaliban box office: மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன்.. 5 நாளில் அள்ளிய வசூல் எவ்வளவு?

திருவனந்தபுரம்: இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த ஜனவரி 25ம் தேதி வெளியான மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், வசூல் ரீதியாக படம் எப்படி ஓடுகிறது என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மலைக்கோட்டை வாலிபன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள் பீமசேனன் போல மாயாவியாக மோகன்லால் நடித்துள்ளாரா என்றே பெரிய எதிர்பார்ப்பை அந்த படத்தின் மீது வைத்தனர். கடைசி வரை இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி வெறும் பில்டப்புகளை மட்டுமே கொடுத்து கடைசியில் குழந்தைகளுக்கான காமிக்ஸ் கதை போல எடுத்து வைத்த நிலையில், ரசிகர்கள் அப்செட் ஆகிவிட்டனர்.

Mohanlals Malaikottai Vaaliban Day 5 box office collection reports are here

நேரு படம் செம ஹிட்: ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், பிரியாமணி, அனஸ்வரா ராஜன் நடிப்பில் கடந்த டிசம்பர் 21ம் தேதி வெளியான நேரு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. திரிஷ்யம், திரிஷ்யம் 2 படங்களை மோகன்லாலை வைத்து ஹிட் கொடுத்த ஜீத்து ஜோசப் கண் தெரியாத பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்படும் நிலையில், அவருக்கான நீதியை வழக்கறிஞரான மோகன்லால் எப்படி பெற்றுத் தருகிறார் என்கிற கோர்ட் ரூம் டிராமா படமாக வெளியாகி 85 கோடி ரூபாய் வரை பாக்ஸ் ஆபிஸில் அள்ளியது.

ரசிகர்கள் ஏமாற்றம்: குடியரசு தினத்தை டார்கெட் செய்து மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் படம் திரையரங்குகளில் வெளியானது. ஆஸ்கருக்கு முன்னதாக அனுப்பப்பட்ட ஜல்லிக்கட்டு படத்தை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடிக்கிறார் என்றதுமே ஹைப் எகிறியது. மாயாஜால கதையாக வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசியில் கதை குழந்தைகளுக்கான காமிக்ஸ் கதை போல வேறு விதமாக வெளியான நிலையில், பெரிய ஏமாற்றமே மிஞ்சியது.

மலைக்கோட்டை வாலிபன் கதை: யாராலும் அழிக்க முடியாத மாவீரனாக மலைக்கோட்டை வாலிபனாக மோகன்லால் வருகிறார். அவரது ஆசானாக ஹரிஷ் பெரடி நடித்துள்ளார். ஒவ்வொரு ஊருக்கும் சென்று அங்குள்ள வீரர்களை அடித்து வீழ்த்தி தனது பெயரை பதிக்கிறார். அப்படி ஒரு ஊருக்குச் செல்லும் போது அங்கே அடிமைப்பட்டுக் கிடக்கும் ஹீரோயினுக்கு உதவ வில்லங்கத்தை சம்பாதிக்கிறார். ரங்க ராணியின் காதலுக்காக வில்லன் சமத்தகன் மற்றும் அவரது சேனையுடன் மோதும் மலைக்கோட்டை வாலிபன் என்ன ஆனார் என்பது தான் படத்தின் கதை.

5 நாள் வசூல்: மோகன்லால் நடிப்பில் வெளியான மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் முதல் நாளில் வெறும் 5 கோடி ரூபாய் வசூலை மட்டுமே அள்ளியது. குடியரசு தின விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை இருந்த நிலையிலும், இதுவரை ஒட்டுமொத்தமாக 21.75 கோடி வசூலை மட்டுமே அள்ளியிருக்கிறது. முதல் நாள் வசூலை விட 5ம் நாள் வசூல் 90 சதவீதம் குறைந்து விட்டதாகவும் பல காட்சிகள் நீக்கப்பட்டு ஷோக்கள் மிகவும் குறைந்து விட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. 65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் அதிகபட்சமாக 40 கோடி வசூல் கூட பெறுமா என்பது சந்தேகம் தான் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X