மோகன்லாலின் அந்த படம் ஹாலிவுட் படத்தின் காப்பியா?.. ஜீத்து ஜோசப்பும் இப்படி அட்லீயா மாறிட்டாரே!

திருவனந்தபுரம்: சினிமாவில் காலம் காலமாக இருந்தே காப்பி அடிப்பது இன்ஸ்பிரேஷன் என்கிற பெயரில் வேரூன்றித்தான் இருக்கிறது. வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட படங்களை போல நம்ம ஊரில் எடுத்து ரசிகர்களுக்கு காட்ட வேண்டும் என்கிற ஆவலில் சிலர் அதை செய்து வருகின்றனர். பெரிய லாபத்தை ஈட்டும் திரைத்துறையில் சொந்த சிந்தனை இருக்க வேண்டும் என்றும் plagiarism இருக்கக் கூடாது என விதிகள் இருந்தாலும் பல இயக்குநர்கள் அதை மீறி வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் மோகன்லால் நடிப்பில் வெளியான நேரு (Neru) திரைப்படம் 85 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது. திரிஷ்யம் 1 மற்றும் 2 படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான இந்த படம் அப்படியே ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காப்பி என்பதை ரசிகர்கள் கண்டுபிடித்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

 Mohanlals Neru copied from Sketch Artist II: Hands That See?

மோகன்லாலின் நேரு: கடந்த டிசம்பர் 21ம் தேதி வெளியான நேரு திரைப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான அந்த படம் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. படத்தை பார்த்த பலரும் எப்படித்தான் ஜீத்து ஜோசப் இப்படியெல்லாம் கதைகளை யோசித்து இயக்குகிறாரோ என அவரை பாராட்டித் தள்ளினர். ஆனால், தற்போது இந்த படமும் ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காப்பியா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அட்லீ வரிசையில் ஜீத்து ஜோசப்?: இயக்குநர் அட்லீ வரிசையில் ஜீத்து ஜோசப்பும் இணைந்து விட்டாரா? என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தை இன்ஸ்பயர் செய்து தான் லியோ எடுத்தேன் என லோகேஷ் கனகராஜ் கிரெடிட்ஸ் கொடுத்திருந்தார். ஆனால், ஜீத்து ஜோசப் அதையும் செய்யாதது தான் தற்போது பிரச்சனையை கிளப்பி உள்ளது.

ஹாலிவுட் படத்தின் காப்பி?: எழுத்தாளர் மைக்கேல் ஏஞ்சலி எழுதி இயக்குநர் ஜேக் ஷோல்டர் இயக்கத்தில்1995ல் வெளியான Sketch Artist II: Hands That See திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி தான் மோகன்லால், பிரியாமணி நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் மலையாளத்தில் வெளியான நேரு படம் என ரசிகர்கள் ஆதாரத்துடன் வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர்.

என்ன கதை: பார்வையை இழந்த பெண்ணை பலாத்காரம் செய்து விடுகின்றனர். ஆனால், அவர் தன்னை பலாத்காரம் செய்தவரின் சிலையை வடித்துக் காட்ட போலீஸ் அதிகாரி கைது செய்கிறார். நீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக வாதாட பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக பல ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றாமல் இருந்து வந்த மோகன்லால் வாதாட வருகிறார். அந்த பெண்ணுக்கு கடைசியில் எப்படி நீதி கிடைத்தது என்பது தான் கதை. ஹாலிவுட் படமான Sketch Artist II: Hands That See படத்தில் சிலைக்கு பதிலாக அந்த உருவத்தை பேப்பரில் வரைந்துக் காட்டி தன்னை கெடுத்தவருக்கு தண்டனை பெற்றுத் தருகிறார் அங்கேயும் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண். இரு கதையும் ஒரே மாதிரி இருக்கும் நிலையில், அங்கிருந்து தான் ஜீத்து ஜோசப் ஆட்டையை போட்டுள்ளார் என ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X