Haraa Box Office: ராமராஜன் பட வசூலை விட அதிகம்.. ஆனால், ’ஹரா’வும் அவுட்டு தான்.. முதல் நாள் வசூல்!

சென்னை: விஜய் ஸ்ரீ இயக்கத்தில் மோகன், அனுமோல், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி, வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்த 'ஹரா' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. வெள்ளி விழா நாயகன் என ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட மோகன் 14 வருடங்கள் கழித்து படம் நடித்தால் அவரை காண மக்கள் கூட்டம் வருமா? என்கிற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

பல வருடங்கள் கழித்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த 'கோட்' படத்தின் மூலம் மோகன் கம்பேக் கொடுத்திருக்கலாம் என்றே ரசிகர்கள் கூறுகின்றனர். 'ஹரா' படத்தின் கதை மற்றும் திரைக்கதை என படமாகவே அது வொர்த்தாக இல்லை என ஏகப்பட்ட விமர்சகர்களும் பொது மக்களும் கழுவி ஊற்றி உள்ளனர்.

box office mohan haraa Ramarajan Saamaniyan GOAT

ஆனால், மோகனுக்கு ஒரு ஆறுதல் விஷயமாக ராமராஜன் நடித்த சாமானியன் படம் வசூல் செய்ததை விட முதல் நாளில் ஹரா திரைப்படம் சற்று அதிகமாக வசூல் செய்துள்ளது.

சாமானியன் வசூல்: ராமராஜன், ராதா ரவி, எம்.எஸ். பாஸ்கர் நடிப்பில் வீட்டு கடன் வாங்கினால் எப்படி எல்லாம் கஷ்டப்படுவீங்க என்கிற பயத்தைக் காட்டி வெளியான சாமானியன் படம் முதல் நாளிலேயே பார்க்க மக்கள் கூட்டம் வராத நிலையில், அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்ததது. ஒட்டுமொத்தமாக அந்த படம் 1 கோடி ரூபாய் வசூலை கூட தாண்டவில்லை என்கின்றனர். வெற்றி பெற்றிருந்தால் யூடியூப் சேனல்களில் இன்னும் ஒரு ரவுண்டு வந்து ராமராஜன் பல பேட்டிகளை கொடுத்திருப்பார். ஆனால், தற்போது மீண்டும் சைலன்ட் மோடுக்கு சென்று விட்டார்.

ஹரா விமர்சனம்: கொத்த தெரியாதவன் அம்மிக் கல்லை கொத்தியது போல படத்தை இயக்குநர் விஜய் ஸ்ரீ எடுத்து வைத்துள்ளார் என பல விமர்சகர்கள் படத்தை கழுவி ஊற்றியுள்ளனர். சிலர் மோகனுக்காக படத்தின் விமர்சனத்தை சொல்லாமலே விட்டு விட்டனர். மீண்டும் ராமராஜன், மோகன் எல்லாம் நடிப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் அவர்களின் வயதுக்கு ஏற்ற நல்ல கதைகளை நல்ல இயக்குநர்கள் மூலம் கொடுத்தால் தான் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்கின்றனர்.

முதல் நாள் வசூல்: விஜய் ஸ்ரீ இயக்கத்தில் மோகன் நடித்துள்ள ஹரா படத்தில் தனது மகளின் மரணத்துக்கு காரணமானவர்களை ராம் என்பவர் இப்ராஹிமாக ஆள் மாறாட்டம் செய்து போட்டுத் தள்ளுவது தான் கதை. ஹரா திரைப்படம் முதல் நாளில் அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வசூல் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வெள்ளி விழா நாயகனை அவரது ரசிகைகள் காண தியேட்டருக்கு சென்றால் 1 முதல் 2 கோடி வரை அதிகபட்சம் வசூல் வரும் என தெரிகிறது.

'கோட்' மிரட்டும்: விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், ஜெயராம் என ஏகப்பட்ட சீனியர் நடிகர்கள் இணைந்து நடித்துள்ள கோட் திரைப்படம் நடிகர் மோகனுக்கு வெயிட்டான படமாக மாறும் என மோகன் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மோகன் அந்த படத்தில் தீவிரவாதியாக நடித்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X