ராமராஜனுக்கு விழுந்த அடி மோகனுக்கும் விழுமா?.. ’ஹரா’ ரிலீஸால் ‘கோட்’ படத்துக்கு சிக்கல் ஏற்படுமா?

சென்னை: 80 மற்றும் 90 காலக்கட்டங்களில் வெள்ளி விழா நாயகர்களாக மாஸ் காட்டி வந்த ராமராஜன் மற்றும் மோகன் பல வருடங்களுக்குப் பிறகு 2024ம் ஆண்டு மீண்டும் ஹீரோவாக நடித்துள்ளனர். இந்த வாரம் ராமராஜன் நடித்த 'சாமானியன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால், அந்த படங்களை பார்க்க பெரிதாக ரசிகர்கள் ஆர்வம் செலுத்தவில்லை.

ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்தால் கூட மக்கள் கூட்டம் தியேட்டருக்கு அலைமோதும் எனத் தெரிகிறது. ஆனால் அவர் நடிப்பில் புதிதாக வெளியாகியுள்ள படத்தை பார்க்க ரசிகர்கள் கொஞ்சம் கூட ஆர்வம் காட்டவில்லை.

Mohan s Haraa will face a same box defeat like Ramarajan s Saamaniyan

இதே நிலைமை நடிகர் மோகனுக்கும் ஏற்படுமா? என்கிற கேள்வி தற்போது சினிமா வட்டாரத்தில் தீயாக கிளம்பியுள்ளது. சமீபத்தில் மோகன் நடித்த ’ஹரா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில், அந்தப் படமும் வசூல் ரீதியாக அடிவாங்கும் என்றே விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.

மௌனராகம்: மோகன் நடித்த மௌனராகம் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்தாலும் தியேட்டர்களில் அந்த படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் குவியும் எனத் தெரிகிறது. மணிரத்தினம் இயக்கத்தில் மோகன், கார்த்திக் மற்றும் ரேவதி நடித்த மௌனராகம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. மோகன் நடித்து வெளியான பல படங்கள் வெள்ளிவிழா கொண்டாடிய நிலையில், அவரது புதிய படமான ஹரா படத்தின் டிரெய்லரிலேயே வெள்ளிவிழா நாயகன் மோகன் என்று டைட்டில் கார்டு போடப்பட்டுள்ளது.

சுட்டப்பழம்: கடந்த 2008-ம் ஆண்டு மோகன் நடித்து வெளியான சுட்டப்பழம் திரைப்படம் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. அடல்ட் ஒன்லி படமாக அந்த படம் வெளியான நிலையில், அதன் பின்னர் மோகன் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழித்து மோகன் நடித்துள்ள 'ஹரா’ திரைப்படம் வரும் ஜூன் மாதம் 7ம் தேதி ’ஹரா’ திரைப்படம் வெளியாகிறது.

சறுக்கிய சாமானியன்: ராஹேஷ் இயக்கத்தில் ராமராஜன் நடித்து வெளியான சாமானியன் திரைப்படம் இந்த வாரம் வெளியான நிலையில், அந்த படம் ஒட்டுமொத்தமாக 25 லட்சம் ரூபாய் கூட வசூல் செய்யவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் நாளிலேயே அந்த படம் ஓடாத நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அந்தப் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் வரவில்லை என்று கூறுகின்றனர். ஒரு காலத்தில், ரஜினி படத்துக்கே ராமராஜன் படம் டஃப் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த வாரம் ஹிப் ஹாப் ஆதி படம் செய்யும் வசூலை கூட ராமராஜன் படம் செய்யவில்லை.

மோகன் படத்தின் நிலைமை என்ன?: விஜய் ஸ்ரீ இயக்கத்தில் மோகன் நடித்துள்ள ஹரா திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், அந்தப் படத்துக்கும் ராமராஜனின் சாமானியன் படத்துக்கு ஏற்பட்ட நிலைமைதான் ஏற்படுமா என்கிற அச்சம் சினிமா வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. 67 வயதான மோகன் 16 ஆண்டுகள் கழித்து அதிரடி ஆக்‌ஷனில் ராம் மற்றும் தாவூத் இப்ராஹிம் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹரா படத்துக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

’கோட்’ படத்துக்கு சிக்கல்?: மோகன் நடிப்பில் அடுத்த மாதம் ஹரா திரைப்படம் வெளியாகி வெற்றிப் பெறவில்லை என்றால் விஜய் நடித்துள்ள கோட் படத்தில் மோகன் முக்கிய வில்லனாக நடித்தால் நிச்சயமாக கோட் படத்துக்கும் அதன் மூலம் பாதிப்பு ஏற்படும் எனக் கூறுகின்றனர். கோட் படத்துக்குப் பிறகு ஹரா திரைப்படம் வெளியானால் அந்த படத்துக்கும் கொஞ்சம் வசூல் வரும் என்றும் சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், முந்தி வரும் மோகன் படம் என்ன ஆகிறது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X