twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்த 10 நாட்கள்.. மன ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதித்த கொரோனா.. வைரஸ் தாக்கிய டிவி நடிகை கவலை!

    By
    |

    மும்பை: கொரோனா பாதிப்பு காரணமாக மனரீதியாக பாதிக்கப்பட்டேன் என்று கூறியுள்ளார் பிரபல டிவி நடிகை.

    பிரபல இந்தி சின்னத்திரை நடிகை மோகனா குமாரி சிங். ரெமோ டிசோசா இயக்கத்தில் பிரபுதேவா நடித்த ஏபிசிடி என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

    பியார் துனே க்யா கியா, யே ரிஷ்டா க்யா கெஹ்லாதா ஹே, ட்விஸ்ட்வாலா லவ், சில்சிலா பியார் கா, ஃபியர் ஃபைல்ஸ் உட்பட பல இந்தி சிரியல்களில் நடித்துள்ளார்.

    சினிமாவுக்கு முழுக்கு..துபாயில் வேலை பார்க்கும் தமிழ் ஹீரோயின்..மாடர்ன் லுக்கில் ரணகள போட்டோஷூட்! சினிமாவுக்கு முழுக்கு..துபாயில் வேலை பார்க்கும் தமிழ் ஹீரோயின்..மாடர்ன் லுக்கில் ரணகள போட்டோஷூட்!

    லாக்டவுன்

    லாக்டவுன்

    கொரோனா லாக்டவுன் காரணமாக சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. படப்பிடிப்பு இல்லாததால், நடிகை மோகனா குமாரி சிங் தனது குடும்பத்துடன் டேராடூனில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதை அடுத்து குடும்பத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது இந்தி சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பரிசோதனை

    பரிசோதனை

    இதுபற்றி அவர் கூறும்போது, எனது மாமியாருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது. கொரோனா பரிசோதனை செய்தோம். ஒன்றுமில்லை. மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால், காய்ச்சல் குறையவில்லை. இதனால் குடும்பத்தோடு சோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. ரிஷிகேஷில் உள்ள மருத்துவமனையில் குடும்பத்தோடு அனுமதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு எந்த கொரோனா அறிகுறியும் முதலில் இல்லை. என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறியிருந்தார்.

    மீண்டு வந்துள்ளனர்

    மீண்டு வந்துள்ளனர்

    இதையடுத்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த இவர்கள், 10 நாட்களுக்குப் பிறகு குணமாவதற்கு முன்பே வீட்டுக்குத் திரும்பினர். அங்கு தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வசித்தனர். இப்போது அதில் இருந்து மீண்டு வந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது உடல்ரீதியாக மோசமாக உணர்ந்ததாக ஏற்கனவே கூறியிருந்தார் நடிகை மோகனா குமாரி.

    மன ஆரோக்கியம்

    மன ஆரோக்கியம்

    இந்நிலையில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டபோது தனது மன ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார் இவர். 'மனரீதியான கவலையை அடைந்தேன் நான். யாராக இருந்தாலும் அப்படித்தான் இருப்பார்கள். எனது கணவர் எனக்குத் துணையாக இருந்தார். கூடவே விதிகளையும் கட்டுப்பாடுகளையும் மீறாமல், ஒருவருக்கொருவரின் உடல் நலம் குறித்து அடிக்கடி விசாரித்துக்கொண்டோம்.

    மோசமாக்கி விடும்

    மோசமாக்கி விடும்

    நலம் விசாரிப்பதும் பேசிக்கொண்டிருப்பதும் இதில் முக்கியம். ஏனென்றால் கவலைகளை மனதுக்குள்ளேயே வைத்திருந்தால் அது, இன்னும் மோசமாக்கிவிடும். அதனால் எனர்ஜியை விட்டுவிடாமல் விசாரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தோம். அப்படியே செயல்பட்டோம். அதில் இருந்து மீண்டு வந்தோம்' எனத் தெரிவித்துள்ளார்.

    English summary
    TV actor Mohena Kumari opens up on how the isolation during Covid-19 can lead to stress, adding that supporting each other and venting out feelings is the way out.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X