கள்ளத்தொடர்பு வைத்து என்னை ஏமாற்றினார்: நடிகை மீது டிவி நடிகர் புகார்

By Siva

மும்பை: வருங்கால மனைவியான நடிகை ஒரு நடிகருடன் தொடர்பு வைத்து தன்னை ஏமாற்றியது குறித்து அறிந்த பிறகு வேதனை அடைந்ததாக பிரபல தொலைக்காட்சி நடிகர் மோஹித் அப்ரால் தெரிவித்துள்ளார்.

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் மோஹித் அப்ராலுக்கும், தொலைக்காட்சி நடிகை மான்சி ஸ்ரீவஸ்தவாவுக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 8 ஆண்டுகளாக காதலித்து லிவ் இன் முறைப்படி வாழ்ந்த அவர்கள் திருமணம் நிச்சயமான சில மாதங்களில் பிரிந்துவிட்டனர்.

Mohit Abrol accuses Mansi of cheating him

இந்நிலையில் மான்சி தன்னை ஏமாற்றிவிட்டதாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டார் மோஹித். அந்த போஸ்ட்டில் அவர் கூறியதாவது,

மான்சியை மீண்டும் சந்தித்து முறைப்படி குட்பை சொல்ல விரும்பினேன். ஆனால் நாம் நேசிப்பவர்களுக்கு குட்பை சொல்ல முடியாது. அது நம் உடம்பில் ஒரு பகுதியை துண்டித்து தூக்கி வீசுவது போன்றது.

நான் உன்னை உண்மையாக காதலித்தேன். அந்த காதல் தான் கடைசி வரைக்கும் என்று நினைத்தேன். ஆனால் எதுவும் கடைசி வரை இல்லை என்பதை பின்னர் புரிந்து கொண்டேன். நமக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தபோதே நீ அடுத்தவருடன் காதல் கொண்டது தான் எனக்கு வேதனையாக உள்ளது. மேலும் இது போன்று நீ செய்தது இது ஒன்றும் முதல் முறை அல்ல.

Mohit Abrol accuses Mansi of cheating him

என்னை போன்று உன் புதிய காதலரை பயன்படுத்தி வீச வேண்டாம் அல்லது அவரை 8 ஆண்டுகளாக யூஸ் பண்ண வேண்டாம். ஒரு மனைவி போன்று என்னுடன் வாழ்ந்தாய். நான் உன்னை பத்திரமாக பார்த்துக் கொண்டேன். நான் டெல்லியில் இருந்து மும்பைக்கு வந்த பிறகு உனக்காக செலவு செய்தது முதல் ஆடிஷன்களுக்கு உன்னை அழைத்துச் சென்றது வரை அனைத்தையும் ஒரு கணவன் செய்வது போன்று செய்தேன்.

என் வாழ்வின் 8 ஆண்டுகளை உனக்கு கொடுத்துள்ளேன். நான் உன்னுடன் இருந்தபோது என் கெரியர், உடல்நலம் பற்றி எல்லாம் கவலைப்படவே இல்லை. உன்னை பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தேன் என்று மோஹித் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் அவர் அந்த போஸ்ட்டை நீக்கிவிட்டார். மான்சி நடிகர் அர்ஹான் பெஹ்லுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை ஏமாற்றியதாக மோஹித் குற்றம் சாட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X