அசவுகரியமா இருந்தால் ஏன் சொல்லல?: கண்ட இடத்தில் கை வைத்தது குறித்து நடிகர்
மும்பை: நடிகை டீனா தத்தா பாலியல் புகார் தெரிவித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகர் மோஹித் மல்ஹோத்ரா.
டாயன் இந்தி தொலைக்காட்சி தொடரில் ஜோடியாக நடித்து வருபவர்கள் மோஹித் மல்ஹோத்ரா, டீனா தத்தா. நெருக்கமான காட்சி ஒன்றை ஷூட் செய்தபோது மோஹித் தன்னை கண்ட இடத்தில் தொட்டதாக டீனா புகார் தெரிவித்தார்.
மோஹித் சில்மிஷம் செய்ததை அடுத்து டீனா அழுது கொண்டே ஓடியதை அங்கிருந்தவர்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து பேசியுள்ளார் மோஹித்.

மோஹித்
இந்த புகார் எல்லாம் எங்கிருந்து வருகிறது என்றே தெரியவில்லை. ஒன்றும் நடக்கவில்லை என்று கூறிவிட்டு தற்போது டீனா மாற்றி பேசியுள்ளார். அசவுகரியமாக இருந்தால் அவர் ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் மோஹித்.

பிரச்சனை
டீனா தத்தா மோஹித் மீது பாலியல் புகார் தெரிவித்ததை அடுத்து டாயன் தொடரின் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் இருவரையும் அழைத்து பேசியதாக கூறப்படுகிறது. அவர் இந்த இரண்டு பேரிடமும் என்ன பேசினார் என்று இதுவரை தெரியவில்லை.

நீக்கம்
பாலியல் புகார் எழுந்ததால் மக்கள் இனி அதை பற்றித் தான் பேசுவார்கள் என்பதால் டாயன் தொடரை பாதியில் நிறுத்த ஏக்தா கபூர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சில்மிஷம்
டாயன் செட்டில் வைத்து மோஹித் டீனாவிடம் சில்மிஷம் செய்தது இது முதல்முறை அல்ல என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு தயாரிப்பு தரப்பு நல்ல தீர்வு காணும் என்று நம்புவதாக டீனா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











