மொக்க பையன் சப்ப பிகர் செம காதல்... ‘ரோஜாப்பூ’!
சென்னை: சென்னையில் நேற்று "மொக்க பையன் சப்ப பிகர் செம காதல் திரைப்படத்தின் பாடல்கள் வெளியீடு நடைபெற்றது.
தேவி காம்ப்ளக்ஸில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராமகிருஷ்ணா, நடிகர் சாருஹாசன் மற்றும் அப்படத்தில் நடித்த நடிகர், நடிகையர்கள் கலந்து கொண்டனர்.

இயக்கம்...
மொக்க பையன் சப்ப பிகர் செம காதல் என்னும் இப்படத்தினை ஆபாவாணனிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த பி.ஜி ராஜநிதி இயக்கியுள்ளார்.

23 ஆண்டுகாலப் போராட்டம்...
இவர் தன்னுடைய 23 ஆண்டுகால திரைப் போராட்டத்திற்குப் பின்பாக இத்திரைப்படத்தை இயக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

புதுமுகம்...
இத்திரைப்படத்தில் அர்ஜூன் என்ற புதுமுக கதாநாயகனை அறிமுகம் செய்துள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சவுத்ரியின் தயாரித்துள்ளார்.

ரோஜாப்பூ...
மேலும், இப்படத்தில் ரோஜாப்பூக்களை முக்கிய கதாபாத்திரமாக பயன்படுத்தியிருக்கிறார்களாம். அனைத்துக் காட்சிகளிலும் ரோஜாப்பூ தவறாமல் இடம் இடம்பெறுமாம். இத்தகவலால் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











