Kailas Nath: பிரபல மலையாள நடிகர் திடீர் மறைவு… திரைப்பிரபலங்கள் அதிர்ச்சி!

திருவனந்தபுரம்: பழம்பெரும் நடிகர் கைலாஸ் நாத் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 65.

மிமிக்ரி மற்றும் நாடக நடிகரான இவர், பாடலாசிரியர், இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

Mollywood actor and television actor Kailas Nath, 65, died here on Thursday

தயாரிப்பாளர் ஸ்ரீகுமரன் தம்பியிடம் உதவியாளரான தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். திரைக்குப் பின்னால் இருந்த கைலாஸ் நாத் 1977ம் ஆண்டு வெளியான சங்கமம் என்ற மலையாளப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

நடிகர் கைலாஸ் நாத்: அதன் பின், சேதுராம ஐயர் சிபிஐ, சீதா கல்யாணம், சர வர்ஷம் போன்ற படங்களில் நடித்தார். 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அதில் 90 படங்கள் தமிழ் திரைப்படமாகும். தமிழில் டி.ராஜேந்தரின் இயக்கத்தில் வெளியான ஒரு தலை ராகம் படத்தில் தம்பு என்ற கேரக்டரில் நடித்திருந்தார். மேலும், பாலைவனச் சோலை, வள்ளி போன்ற குறிப்பிடத்தக்க தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

Mollywood actor and television actor Kailas Nath, 65, died here on Thursday

கல்லீரல் பிரச்சனை: மலையாள நடிகரான கைலாஸ் நாத் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சாந்த்வானம் சீரியலில் பிள்ளை சேட்டனாக நடித்து சின்னத்திரையிலும் பிரபலமான இவர் திருவனந்தபுரத்தில் தனது மகள் தன்யாவுடன் வசித்து வந்தார். 65 வயதான கைலாஸ் நாத்திற்கு கல்லீரல் தொடர்பாக பிரச்சனை இருந்ததால், அவர் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

திடீர் மரணம்: இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் மரண செய்தி மலையாள திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும், அவருடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்த நடிகர் நடிகைகள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X