இவர் தான் பழுவேட்டரையரா? பொன்னியின் செல்வனில் இணைந்த மற்றொரு பிரபலம்!

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள பொன்னியின் செல்வன் படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மலையாள நடிகர் லால் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Mollywood actor Lal in Mani Ratnams Ponniyin Selvan

சண்டக்கோழி, சீமராஜா, சாஹோ என பல படங்களில் வில்லனாக நடித்து அசத்திய லால், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்.

கல்கியின் வரலாற்று சிறப்புமிக்க புனைவு நாவலான பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க எம்.ஜி.ஆர்., முதல் பல பிரபலங்கள் முயற்சி செய்தனர். ஆனால், கடைசியில், பொன்னியின் செல்வன் படத்தை பிரம்மாண்டமாக இயக்க மணிரத்னம் முடிவு செய்துள்ளார்.

ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, பிரபு, ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்ட பலர் இந்த ட்ரீம் புராஜெக்டில் இணைந்துள்ளனர் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் மலையாள நடிகர் லால் இணைந்துள்ள செய்தியை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு தற்போது நிறைவேறியுள்ளது மிகவும் மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்தில் வரும் டிசம்பர் 12ம் தேதி முதல் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X