‘ஜெயிலர்‘ படப்பிடிப்பு தளத்தில் மோகன்லால்.. அடுத்தடுத்து வெளியான அதிரடி போட்டோ !
சென்னை : ராஜஸ்தானில் நடைபெற்று வரும் ஜெயிலர் படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் மோகன்லால் இணைந்துள்ளார். இணையத்தில் இந்த புகைப்படம் வெளியாகி டிராண்டாகி வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் ஜெயிலர். இதில், மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் லீட் ரோலில் நடித்து வருகின்றனர்.
படையப்பா படத்திற்கு பிறகு நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றனர்.

ஜெயிலர்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது படத்திற்கு 'ஜெயிலர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ரஜினி ஜெயில் காவலராக நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

ராஜஸ்தானில் படப்பிடிப்பு
சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். சென்னை, எண்ணூர், கடலூர், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிலையில், தற்போது ராஜஸ்தானில் ஜெய்சல்மரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்கான ரஜினி காந்த் சென்னையில் இருந்து விமான மூலம் ராஜஸ்தான் சென்றார். ஜெயிலர் படத்தின் 70% காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. இன்னும் 30 சதவீத காட்சிகள் மட்டுமே மீதம் இருக்கின்றன. அதில் இரண்டு பாடல் காட்சிகள் மற்றும் ஒரு சண்டைக் காட்சி மட்டுமே ராஜஸ்தானில் எடுக்கப்பட்டு வருகிறது.

மோகன்லாலுடன் ரஜினி
அதிரடி ஆக்ஷன்படமாக உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம்,மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாக உள்ளதால், அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் வகையில் 5 மொழிகளில் உள்ள முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இதுகுறித்த அப்டேட் ஏற்கனவே வெளியான நிலையில் ரஜினியுடன் மோகன்லால் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.

ஜாக்கி ஷெராஃப்
அதே போல, படப்பிடிப்பு தளத்தில் ஜாக்கி ஷெராஃப் மிரட்டலான லுக்குடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக ஜாக்கி ஷெராஃப் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே தளபதி விஜய் நடித்த பிகில் படத்தில் அதிரடியாக வில்லனாக நடித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











