"பயப்படாதே, நான் உன்ன கடிச்சு திங்கமாட்டேன்"... வைரலாகும் மம்மூட்டி வீடியோ!

பெண் நிருபரிடம் நடிகர் மம்மூட்டி பேசும் வீடியோ வைரலாகியுள்ளது.

சென்னை: நடிகர் மம்மூட்டி தொலைக்காட்சி பெண் தொகுப்பாளரிடம் வேடிக்கையாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

கேரளாவில் மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் அதிக ரசிகர்களை கொண்டவர் நடிகர் மம்மூட்டி. இவர் ஒரு முன்கோபக்காரர் என்பது எல்லோரும் அறிந்ததே. அதன் காரணமாக இவருடன் சேர்ந்து நடிக்க பலரும் தயங்குவர்.

Momootys video goes viral in social media

அதேசமயம், மம்மூட்டி எந்த அளவுக்கு கோபக்காரரோ, அதே அளவுக்கு நகைச்சுவையாக பேசுவதிலும் வல்லவர். அதேபோல், சக நடிகர்களுக்கு கற்றுக்கொடுப்பதிலும் பெயர் பெற்றவர். எனவே, முன்கோபியாக இருந்தாலும், அவருடன் சேர்ந்து நடிக்க புதுமுகங்கள் நிறைய பேர் விரும்புவர்.

தற்போது அவர் ஒரு பெண் நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் வேடிக்கையாக பேசும் வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் டென்ஷனாக இருக்கும் அந்த பெண் தொகுப்பாளியின் கையில் தட்டி, "பயப்படாதே நான் ஒன்றும் உன்னை கடித்து தின்றுவிட மாட்டேன்", என மம்மூட்டு கூறுகிறார். இதையடுத்து அந்த பெண் சற்று சகஜ நிலைக்கு வருகிறார்.

மேலும், அந்த பெண் கையில் அணிந்திருக்கும் பிரேஸ்லெட் மற்றும் அவரது பெயர் ஆகியவற்றை மம்மூட்டி கேட்டறிகிறார். மம்மூட்டியின் இந்த செயலை, அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X