ஹன்சிகா-சிம்பு திருமணம் எப்பொழுது?: அம்மா மோத்வானி விளக்கம்
சென்னை: ஹன்சிகாவுக்கு திருமணம் எப்பொழுது என்பது குறித்து அவரது தாய் மோனா மோத்வானி விளக்கம் அளித்துள்ளார்.
கோலிவுட்டில் டாப் கியரில் சென்ற ஹன்சிகா தான் சிம்புவை காதலிப்பதை அனைவருக்கும் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஹன்சிகா-சிம்பு திருமணம் குறித்து அவரது தாய் மோனா மோத்வானி விளக்கம் அளித்துள்ளார்.

வேலை வேலை
ஹன்சிகா கையில் 9 படங்கள் உள்ளன. அவர் தற்போது மான் கராத்தே படத்தில் நடித்து வருகிறார். அடுத்த மாதம் சுந்தர். சி.யின் அரண்மனை பட ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார் என்றார் மோனா.

திருமணம்?
ஹன்சிகா நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருவதால் இப்போதைக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் மோனா.

காதல் இன்னும் இருக்கா?
ஹன்சிகாவிடம் சிம்பு பற்றி ஒரு முன்னணி நடிகை போட்டுக் கொடுத்துள்ளாராம். இதையடுத்து ஹன்சிகா சிம்புவுடன் பேசுவதையே நிறுத்திவிட்டார் என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதேவி கையால
துபாயில் நடந்த சிமா விருது விழாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை ஹன்சிகா ஸ்ரீதேவியின் கையால் பெற்றார். ஸ்ரீதேவியின் கையால் விருது வாங்கியதை நினைத்து நினைத்து பூரிக்கிறாராம் ஹன்ஸி.


Click it and Unblock the Notifications











